Breaking
Mon. Dec 23rd, 2024
துருக்கிக்காக துஆ செய்வோம்  மக்களால் வீழ்த்தப்பட்ட இராணுவ புரட்சி அர்துகானின் உரை.
ஆயுத படையில் உள்ள சிறிய பிரிவினர் துரதிஷ்ட வசமாக துருக்கியின் ஒற்றுமையையும் மக்களையும் குறிவைத்து விட்டார்கள்.
இது படையை சுத்தம் செய்வதட்கு அல்லாஹ் செய்த ஏற்பாடு.
இப்பொழுது நேரம் அதிகாலை 4.30 மணி இந்நேரத்தில் மில்லியன் கணக்கான துருக்கி மக்கள் பாதையில் இருக்கிறார்கள். நான் இத்தகைய நாட்டின் குடிமகன் என்பதையிட்டு பெருமை படுகிறேன்.
சட்டபூர்வ ஆட்ச்சியை கவிழ்க்க ஒன்றன் பின் ஒன்றாக முயறசிக்கிறார்கள்.
இவர்களுக்கு எதிராக நாமும் கபன் ஆடை எமது ஆடையாக இருக்குமளவுக்கு தொடர்ந்து போராடிக்கொண்டிருப்போம்.
இந்த கூட்டத்தினர் விமான நிலையத்தை ஆக்கிரமிக்க முயறசி செய்துள்ளார்கள் நாட்டின் தலைவரை கொள்ள முயன்றுள்ளார்கள் ( அர்துகானின் வீட்டை தாக்கி அவரை கொலை செய்யும் நோக்கில் குண்டு எறிந்துள்ளார்கள் ) நாட்டின் ஜனாதிபதி பிரதமர் பாதுகாப்பு படை , உளவு பிரிவுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்கள்.
-நீங்கள் முஹம்மதின் படையணியை சேர்ந்தவர்கள். உங்களது துப்பாக்கிகளை துருக்கி தாய்மாருக்கு எதிராக நீட்ட வேண்டாம் .அது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும்

By

Related Post