Breaking
Tue. Dec 24th, 2024
பொது மக்களின் சொத்துக்களை கொள்ளையிடுவோர் மறு ஜென்மத்தில் காகங்களாகவும், நாய்களாகவும் பிறப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் திணைக்களத்தின் 125ம் ஆண்டு பூர்த்தி நிகழ்வினை முன்னிட்டு இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் சொத்துக்களை கொள்ளையிடுவோர் மறு ஜென்மத்தில் நாய்கள், காகங்களாக பிறப்பார்கள் என நிசங்கமல்ல ஆட்சிக் கால ஓலைச் சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த ஓலைச் சுவடி இன்றைக்கும் பொருத்தமானது என கருதுகின்றேன்.
இதனால் குறித்த ஓலைச் சுவடியை அரசாங்க நிறுவனங்களின் முன் காட்சிப்படுத்துவதனால் நல்ல பலனை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post