Breaking
Wed. Mar 19th, 2025

பள்ளப்பட்டியை சேர்ந்த ஆலிம்கள் சில தினங்களுக்கு முன் திண்டுக்கல் அருகே விபத்திற்குள்ளாகி அனைவரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

அரசின் உதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த முஸ்லிம்கள், ஜமாஅத்துல் உலமா சார்பாக வசூல் செய்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதாக அறிவித்தனர்.

அரசு உதவி செய்யாவிட்டாலும் அறியாத புறத்திலிருந்து அல்லாஹ்வுடைய உதவி வந்ததால் ரூ.2 கோடிக்கும் மேல் வசூல் ஆனது.

அதனைத்தொடர்ந்து நேற்று முன் தினம் (17.04.2015) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கும் பிறகு விபத்தில் பலியான ஆலிம்களின் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் முதல்கட்ட நிதி உதவியாக வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து வாகன ஓட்டுநர் மோகன் என்பவரின் வீட்டிற்கும் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரில் சென்று நிதியுதவி வழங்கினர்.

அரசு செய்ய வேண்டிய உதவியில் முஸ்லிம்களின் பணமும் அடங்கியுள்ள சூழலில் அரசுக்கு இரக்கமில்லாமல் போனது.

ஆனால் ஜமாஅத்துல் உலமா வசூல் செய்த பணத்தில் முஸ்லிம்களின் பணமே முழுமையாக இருந்தும் ஓட்டுநர் பிறமதத்தை சேர்ந்தவராக இருந்தும் அவருடைய குடும்பத்தினருக்கும் லட்சக்கணக்கான ரூபாய்கள் நிதியுதவி வழங்கியது இஸ்லாத்தின் மேன்மைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இது தான் இஸ்லாம்…

தகவல் உதவி : அத்திக்குர்ரஹ்மான்

Related Post