எம்.சி.அன்சார்
ஆண்டாண்டு காலமாக அரசியல் செய்துவரும் எமது முஸ்லிம் தலைமைகள் சமூக, பொருளாதார நலனில் அக்கறைகொண்டதாகத் தெரியவில்லை. சமூகத்தின் குறைகளை நிவர்த்திப்பதற்கான பல வாய்ப்புக்களை அவர்கள் கொண்டிருந்தபோதிலும் அதன் பலனை மக்கள் அனுபவிக்கவில்லை.
இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நாம் பொதுத்தேர்தல் ஒன்றினை எதிர் நோக்கியுள்ளோம். இத்தேர்தல் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இத்தேர்தலுக்குப் பின்னர் வேறுபட்ட அரசியல் நெருக்கடிகைளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம்.
எதிர்வருகின்ற தேர்தலிலே முஸ்லிம் மக்களுக்காக எப்போதும் தைரியமாக குரல்கொடுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமை ரிஷாத் பதியுதீயுடன் கைகோர்த்து தனது பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். என பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் போட்டியிடும் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
போட்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களின் ”புதிய உலகின் நுழைவாயில்” எனும் எதிர்காலஅரசியல் வேலைத்திட்டங்கள் அடங்கிய கொள்கைப் பிரகடன வெளியீட்டு விழா நேற்று (02) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் பிரதித்தவிசாளர் எம்.ஏ. தம்பிக்கண்டு தலைமையில் இடம்பெற்ற விழாவில் பிடகடன வெளியீட்டு வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே- திகாமடுல்ல மாவட்ட மக்கள் கடந்த மூன்று தசாப்சகால யுத்தம், சுனாமி, வெள்ளப்பெருக்கு, வரட்சி, போன்ற இயற்கை அனர்த்தங்கள் மூலம் பல இன்னல்களை சந்தித்த மக்களின் துயரங்கள் எண்ணிலடங்காதவை. இன்று யுத்தமற்ற சூழ்நிலையில் மக்கள் வாழ்கின்ற போதும் எமது அரசியல் மற்றும் அபிவிருத்தி தேவைகள் இன்னும் புர்த்திசெய்யப்படவில்லை.
இத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் எவ்வித அரசியல் வேலைத்திட்டங்களுமின்றி பாராளுமன்றப் பதவிகளுக்காக மக்கள் ஆணைகோரும் பாராம்பரியத்தினை மாற்றியமைப்பதற்கான புதிய நடைமுறையொன்றினை நான் ஆரம்பித்துள்ளேன். சமூக, கலாசரா மேம்பாடு, பசுமை நிறைந்த நகரம், வளமிக்க கிராமம், ஆரோக்கியமான சமூகம், சுத்தமான குடிநீர், பெண்கள் நலன், கல்வியில் புத்தெழுச்சி, விளையாட்டு, பொதுபோக்கு வசதிகள், வீடமைப்பு, விவசாயத்துறை வளர்ச்சி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு வளர்ச்சி, நிருவாக மேம்பாடு மற்றும் நல்லிணக்கம் போன்ற துறைகளை நான் பாராளுமன்ற பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்படும் பொது மேற்படி வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க உத்தேசிக்கவுள்ளேன்.அதற்கான மக்கள் ஆணையை கோரியுள்ளேன்.
அபிவிருத்தி அரசியலை எவ்வாறு செய்வது, உரிமை அரசியலை எவ்வாறு செய்வது என்பனை மிகவும் சாணக்கியமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ரிஷாத் பதியுதீனும் செயப்பட்டு வருகின்றார்.
எனவே. பொதுத் தேர்தலில் மாற்றம் தேவை என்று சிந்திக்கின்ற திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு வாக்களித்து புதிய வரலாறு படைக்க வேண்டும். என்றார்.
இந்நிகழ்வில் உலமாக்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.