Breaking
Fri. Jan 10th, 2025
பங்­க­ளாதேஷ் நாட்டின் தலை­ந­க­ரான டாக்­காவில் உள்ள ஒரு ஹோட்­டலில் நடத்­தப்­பட்ட தீவி­ர­வாத தாக்­கு­த­லுக்கு இந்­தி­யாவைச் சேர்ந்த ஸாகிர் நாயக்கின் மதப் பிர­சா­ரம்தான் தூண்­டு­கோ­லாக இருந்­தது என வெளி­யா­கி­வரும் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு இன்று -14- ‘ஸ்கைப்’ வழி­யாக ஸாகிர் நாயக் விளக்கம் அளிக்­க­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
பங்­க­ளாதேஷ் நாட்டின் தலை­ந­க­ரான டாக்­காவில் உள்ள ஒரு ஹோட்­டலில் நடத்­தப்­பட்ட தீவி­ர­வாத தாக்­கு­த­லுக்கு இந்­தி­யாவைச் சேர்ந்த ஸாகிர் நாயக்கின் மதப் பிர­சா­ரம்தான் தூண்­டு­கோ­லாக இருந்­தது என வெளி­யா­கி­வரும் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அவர் மறுப்பு தெரி­வித்து வரு­கிறார்.
இந்­நி­லையில், ஸாகிர் நாயக்கின் பிரச்­சா­ரங்­களை ஒளி­ப­ரப்பி வரும் அவ­ருக்குச் சொந்­த­மான ‘பீஸ் டி.வி’ சன­லுக்கு பங்­க­ளாதேஷ் அரசு நேற்று தடை விதித்­துள்­ளது. இந்த தடையை மீறி உள்­நாட்டில் யாரா­வது அந்த சனலை ஒளி­ப­ரப்­பினால் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.
அதே­போன்று ஸாகிர் நாயக் மக்­காவில் இருந்து இந்­தி­யா­வுக்கு திரும்­பி­யதும் அவரை கைது செய்ய வேண்டும் என சிவ­சேனா அமைப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.  இந்­நி­லையில், ’உம்ரா’ செய்­வ­தற்­காக சவூதி அரே­பி­யா­வுக்கு சென்ற ஸாகிர் நாயக் அங்­கி­ருந்­த­ப­டியே ஆபி­ரிக்க நாடு­களில் சில பிரச்­சார கூட்­டங்­களில் பங்­கேற்க சென்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
தற்­ச­மயம் ஆபி­ரிக்க நாடு­களில் சுற்­றுப்­ப­யணம் செய்­து­வரும் ஸாகிர் நாயக், இன்று வியா­ழக்­கி­ழமை இந்­திய ஊட­கங்­க­ளுக்கு பேட்­டி­ய­ளிக்­க­வுள்­ள­தாக அவ­ரது செய்தி தொடர்­பாளர் நேற்று அறி­வித்­துள்ளார்.
ஆபி­ரிக்­காவில் இருந்­த­படி, ‘ஸ்கைப்’ வழி­யாக ஸாகிர் நாயக் அளிக்கும் பேட்டி மும்பை ஒர்லி பகு­தியில் உள்ள வர்த்­தக மைய வளா­கத்தில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பாகும்.
இந்த பேட்­டியில் பிர­பல பொலிவூட் ட்டியில் பிரபல பொலி­வூட் நட்சத்திரங்கள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே­வேளை, டாக்கா ஹோட்­டலின் மீது தீவி­ர­வாத தாக்­கு­தலை ஸாகிர் நாயக் தூண்­டி­விட்­ட­தாக செய்தி வெளி­யிட்­ட­தாக கூறப்­படும் பங்­க­ளாதேஷ் நாளி­தழும் ‘அப்­ப­டி­யொரு தக­வலை நாங்கள் வெளி­யி­ட­வில்லை’ என மறுப்புத் தெரி­வித்­துள்­ளது.
பங்­க­ளா­தேஷின் பிர­பல நாளி­த­ழான ‘டெய்லி ஸ்டார்’ இது­தொ­டர்­பாக வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், அப்­பாவி மக்­களை கொல்­லும்­படி ஸாகிர் நாயக் எந்த தீவி­ர­வா­தி­யையும் தூண்­டி­விட்­ட­தாக நாங்கள் செய்தி வெளி­யி­ட­வில்லை.
  நாங்கள் வெளி­யிட்ட செய்­தியில், ‘டாக்கா ஹோட்டல் தாக்­கு­தலில் தொடர்­பு­டைய ஒரு தீவி­ர­வாதி ஸாகிர் நாயக்கின் பேச்சை மேற்கோள் காட்டி முஸ்­லிம்கள் அனை­வரும் தீவி­ர­வா­தி­க­ளாக இருக்க வேண்டும் என்ற கருத்தை பேஸ்புக் மூலம் பரப்பி பிர­சாரம் செய்து வந்­துள்ளார்.
பங்­க­ளா­தேஷில் தனக்கு இலட்­சக்­க­ணக்­கான அபி­மா­னிகள் உள்­ள­தாக கூறி­வரும் ஸாகிர் நாயக்கின் முந்­தைய பேச்சை அவ­ரது பேச்சின் உள்­க­ருத்­துக்கு மாறு­பட்ட வகையில் திரித்து வெளி­யிட சில இளை­ஞர்­களின் புத்தி எப்­படி எல்லாம் செயல்­ப­டு­கி­றது? என்­ப­தைத்தான் எங்­க­ளது செய்திக் கட்­டு­ரையில் குறிப்­பிட்­டி­ருந்தோம்’ என்று டெய்லி ஸ்டார் நாளிதழ் வெளி­யிட்­டுள்ள மறுப்பு அறிக்­கையில்  தெரிவிக்கப் பட்டுள்ளது.

By

Related Post