Breaking
Sun. Dec 22nd, 2024

உலக சுகாதார அமைப்பினால் மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு வாரத்தில் தங்கல்ல-பெலியத்த பிரதேசத்தில் மலேரியா நோயாளிகள் இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிற்கு புனித யாத்திரையை மேற்கொண்ட இருவருக்கே இந்த மலேரியா தொற்றியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு யாத்திரை சென்ற ஆண் ஒருவருக்கும், பெண்ணொருவருக்குமே மலேரியா தொற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் வைத்து காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குறித்த இருவரினதும் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போதே இவர்களுக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மலேரியாவால் பாதிக்கப்பட்ட குறித்த இருவருடனும் மேலும் 60 பேர் இலங்கையில் இருந்து இந்தியா நோக்கி சென்றதாகவும், இதில் குறித்த இருவருக்கும் மலேரியா தொற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

By

Related Post