Breaking
Mon. Mar 17th, 2025
இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு விரைவில் குடியுரிமை வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் எம்.கே. நாராயணன்  தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள் குறித்து இந்திய அரசின் கொள்கையில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தக் கருத்தரங்கில் ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பைச் சேர்ந்த எஸ். சி. சந்திரஹாசனும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கருத்தரங்கின் போது இலங்கை மலையகத்தினை சேர்ந்த பிரபாகரன் என்பவரால் எம்.கே. நாராயணன்   தாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

By

Related Post