Breaking
Fri. Nov 22nd, 2024

பாகிஸ்தானின் கராச்சி அருகே உள்ள ஒரங்கி என்ற பகுதியை சேர்ந்த ரசியா பேகம் என்பவரின் 15 வயது மகனான முகமது ரமசான், கடந்த 2008-ம் ஆண்டு வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்தார். இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் தற்போது போபாலில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளார்.

ரமசான் இந்தியாவில் இருப்பதை சமீபத்தில் கண்டறிந்த ரசியா பேகம், தனது மகனை பாகிஸ்தானுக்கு திரும்ப வைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்கவில்லை. மேலும் ரமசானிடம் போதுமான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவரது வழக்கு கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

பாகிஸ்தானுக்கு தப்பி சென்ற இந்தியப்பெண் கீதா சமீபத்தில் நாடு திரும்பியுள்ள நிலையில், ரமசானின் வழக்கையும் அதிகாரிகள் மீண்டும் கையில் எடுத்து உள்ளனர். இது குறித்து ரசியா பேகத்துக்கு தொண்டு நிறுவன தலைவர் ஒருவர் கூறியிருந்தார். இதனால் தனது மகன் மீண்டும் பாகிஸ்தான் திரும்புவான் என ரசியா பேகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். மேலும் ரமசான் விரைவில் பாகிஸ்தான் திரும்ப இரு நாட்டு பிரதமர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

By

Related Post