Breaking
Fri. Jan 10th, 2025

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதிக்கு, இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை டெல்லியை சென்றடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அவரது பாரியாரும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் வரவேற்கப்பட்டனர்.

இன்று மாலை பராக் ஒபாமாவும் பிரதமர் நரேந்திர மோடியும் ஹைதராபாத்தில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, சர்வதேச தீவிரவாதம், இருதரப்பு வர்த்தகம், அணுசக்தி உடன்பாடு, காலநிலை மாற்றம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் விவகாரம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்துவுள்ளனர்.

அதன் பின்னர் இருவரும் இணைந்து ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொள்ளவுள்ளதுடன் அதன்போது சில முக்கிய அறிவிப்புக்கள் வௌியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Post