Breaking
Mon. Dec 23rd, 2024

இந்தியாவில் புதிய பிரதமர் பதவியேற்றமை வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தியாவின் அரசியலில் மாற்றங்களை ஏற்ப டுத்துவதோடு இலங்கை, இந்திய வர்த்தக உறவுகள் எதிர்காலத்தில் முன்னேற்றமடையுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.

கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கும் இலங்கை வந்துள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப் பின் உயர்மட்ட பிரதிநிதி குழுவின ருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது: தேர்தலில் தீர்க்கமான முடிவை எடுத்த இந்திய மக்களை நாங்கள் வாழ்த்துகிறோம். எதிர்காலத்தில் இந்தியா எமது ஏற்றுமதியை அதிக ரிக்கும் என நான் வலுவாக நம்புகி றேன். அத்துடன் ஒரு முன்னேற்றத்தி னைக் காட்டும் சிறந்த வர்த்தக சமநிலை பேணப்படும் என்ற தெளிவான நம்பிக்கை இருக்கின்றது.

கடந்த வருடம் இரண்டு தடவை இந்திய தொழில்துறை கூட்டமைப் பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவ்விஜயத்தினூடாக வர்த்தகம் தொடர்பான பயனுள்ள கலந்துரை யாடல்கள், கூட்டங்கள் ஆகியவற்றை நாங்கள் அவர்களுடன் வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். முதல் முறையாக இன்று இங்கு வந்திருக்கும் இந்திய உயர்மட்ட பிரதிநிதி குழுவினரை மிக்க ஆவலுடனும் மரியாதையுட னும் வரவேற்கின்றேன்.

தற்போது புதிய இந்தியாவாக தோற்றம் பெற்றுள்ள இந்தியாவின் புதிய வரலாற்று அரசியல் மாற்றங் கள் 4 பில்லியன் அமெரிக்க டொல ரினை தாண்டியுள்ள எங்கள் இருதரப்பு வர்த்தகத்தை கணிசமான அளவு தூண்டும். 2012 ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் இலங்கையில் 158,20 மில்லியன் அமெரிக்க டொலர் பெறு மதியான முதலீடுகளை மேற்கொண் டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுக ளில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை மேற்கொள்ள இந்தியா திட்டமிட் டுள்ளது என கொழும்பிலுள்ள இந் திய உயர் ஸ்தானிகராலய அறிக்கை கள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கை க்கு விஜயங்களை மேற்கொள்ளும் இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எங்கள் அரசாங்கம் முழு ஆதரவினை வழங்கும். இவ்வாறு அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

“மோகன் முத்தா ஏற்றுமதி” நிறுவனத்தின் முகாமைத்துப் பணிப் பாளர் ரமேஷ் முத்தா தலைமையில் இந்திய தொழில்துறை கூட்டமைப் பின் 13 பேரடங்கிய உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் குழுவினர் முதலீடு மற்றும் வர்த்தகத்தினூடாக வர்த்தக வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் வகையில் நான்கு நாள் விஜயமொன்றினை மேற்கொண் டமை குறிப்பிடத்தக்கது

‘மோகன் முத்தா ஏற்றுமதி’ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரமேஷ் உரையாற்றுகை யில் தெரிவித்ததாவது: “சுதந்திர வர்த்தக உடன்படிக்கை காலத்தில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம் வேகமாக அதிகரித்திருந்தது. இந்திய நிறுவனங் கள் இலங்கையில் தங்கள் கூட்டு முயற்சிகளில் உள்ளூர் தேவைகளினை பூர்த்தி செய்வதற்கு உதவுவதற்கு மட்டுமன்றி இலங்கையின் ஏற்றும தியில் ஒரு பகுதியாக இருக்கின்றன.

எமது இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பெரிய அளவிலான உட்கட்டமைப்பு திட் டங்களில் ஆர்வமாக உள்ளனர். உதா ரணமாக சுற்றுலா உட்கட்டமைப்பு, கணனி சார்ந்த தொழில் நுட்பம் மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகியன இவற்றில் சிலவாகும். அத்துடன் சுகாதார நலன் மற்றும் உயர் கல்வி ஆகியவற்றில் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.இந்திய, இலங்கை சுற்றுலாத் திட்டங்களுக்கான கூட்டு முயற்சிகளை அறிமுகப்படுத்த நேரம் வந்துவிட்டது என்று நான் நம்பு கின்றேன். அத்துடன் இலங்கைப் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சத வீத வலுவான வளர்ச்சி வீதத்தினை எட்டியுள்ளமை நல்ல செய்தியாகும்”

இச்சந்திப்பில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு, அறிவு ஒத்துழை ப்பு, தொழில்நுட்ப கூட்டு, உள்கட்டமைப்பு இணைப்பு, இந்திய பயணிகள் சுற்றுலாப் பயணிகள் நலன்கள் தொடர்பிலான விருப்பங்கள் மற்றும் எண்ணங்களை அமைச்சர் ரிஷாட் மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் 13 பேரடங்கிய உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் வெளிப்படுத்தினர்.

இலங்கை வர்த்தக திணைக்களத் தின் படி இரண்டு அண்டை நாடு களுக்கும் இடையேயான இருதரப்பு மொத்த வர்ததகம் 2012 ஆம் ஆண்டில் 4,086 பில்லியன் அமெரிக்க டொலராகவும் 2013 ஆம் ஆண்டில் 3.36 பில்லியன் டொலராகவும் காணப்பட்டது. அதேவேளை இலங்கையின் வர்த்தக

நிலுவையினை மேம்படுத்துவதன் விளைவாக, இந்தியாவின் இறக்குமதி விலைப்பட்டியல் 12 சத வீத வீழ்ச்சியைக் கண்டது. 1998 ஆம் ஆண்டு இலங்கை, இந்திய வர்த்தக ஒப்பந்தம் செயல் படுத்தப்பட்டதன் பின்பு, இருதரப்பு வர்த்தகம் அதிகரித்துள்ளது.

இலங்கையில் இருந்து இந்தியாவுக் கான ஏற்றுமதிப் பொருட்களாக பிரித்த கம்பிகள், கேபிள்கள், குளிர் விப்பான்களுக்கான போத்தல்கள், கொகோ பொருட்கள், பளிங்கு, பலகைகள். ஜாதிக்காய், தளபாடங்கள். ஆடைகள், இறப்பர் கையுறைகள், மற்றும் கண்ணாடிப் பொருட்கள் போன்றன காணப்படுகின்றன. இந் தியாவில் இருந்து இலங்கைக்கான இறக்குமதிகளாக பெற்றோலியப் பொருட்கள், வாகனங்கள், பருத்தி, சர்க்கரை ஆகியன காணப்படுகின்றன.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு 116 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப் பட்டது. இதே வேளை விவசாயம், நிதிச்சேவைகள், கட்டுமான மற்றும் சுகாதாரத் துறைகளில் இலங்கை 2010, 2011ம் ஆண்டில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டில் 7 பில்லியன் அமெரிக்க டொலரையும் இலாபமாகப் பெற்று இரு நாடுகளுக்கும் இடை யேயான வர்த்தக தொடர்பை வலுப்படுத்த இந்திய தொழில்துறை கூட்டமைப்பு எதிர்பார்த்துள்ளது.

இலங்கையில் 2010 ஆம் ஆண்டில் 110 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள முதலீட்டை செய்துள்ள இந்தியா, இலங்கையின் முதல் நான்கு முதலீட்டாளர்கள் வரிசையில் உள்ளது.

இதேவேளை, பல இந்திய நிறுவனங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கையின் மூலோபாய முதலீடுகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்திய தொழில்துறை கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (தினகரன் (06-06-2014)

Related Post