பிரதமர் ரணில் விக்கரமசிங்க, இம்மாதம் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமரின் விஜயத்திற்கான திகதி குறித்து தற்போது இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், எதிர்க்கட்சி தலைவர் நியமனம் மற்றும் அமைச்சரவைக்கு அதிக உறுப்பினர்களை நியமிப்பதற்குரிய நாடாளுமன்ற அங்கீகாரம் ஆகியன பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே இவ்விஜயம் அமையுமென தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த அரசாங்கத்தை பெரிதும் எதிர்த்த இந்தியா, தற்போதைய மைத்திரி அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டது. சீனாவுடனான இராஜதந்திர உறவுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பிரதமரின் இந்திய விஜயம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும், முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.