Breaking
Fri. Jan 10th, 2025

கண்டிப்பா முழுசா படிச்சிட்டு – முடிந்த அளவு பகிருங்கள் !!!  Net Neutrality – இணைய நடுநிலை

Net Neutrality என்றால் அனைத்து இணையதளங்களும் நிலையான வேகம் நிலையான கட்டணம் என்று இணையத்தில் நடந்துகொள்ள ஒரு விதி.இது தான் பொருள் ….ஆனா உண்மை என்னன்னா.

முதலில் இதன் பயன்கள் என்ன ??? என்று பார்ப்போம் ….

இலவச இன்டர்நெட் !!! வாயை பிளக்காதீர் … உண்மை தான் உங்க போனில் பத்து காசு இல்லேன்னா கூட
இலவசமா நீங்க இன்டர்நெட் பயன்படுத்தலாம் !!!

அது எப்படி ஏர்டேல்லோ எந்த நெட்வொர்கோ இலவசமா இன்டர்நெட் கொடுப்பான் ???

அதுக்கும் பதில் இருக்கு …. நீங்க TOLL FREE நம்பர் பயன்படுத்தி இருகிறீர்களா ??? அதாவது இலவசமா போன் பண்ணி பேசும் எண் .. .. அந்த TOLL FREE நம்பர் கான்செப்ட் என்னன்னா நீங்க இலவசமா பேசிக்கலாம் நீங்க பேசினதுக்கு அந்த கம்பெனிகாரன் உங்க தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு காசு கொடுத்துருவான் …

அதே மாதிரி தான் நீங்க இலவசமா பயன்படுத்த போகும் இணையதளம் உங்க தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு காசு கொடுத்துருவான் …

சில மாதங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் கூட இப்படி ஒரு திட்டம் கொண்டுவந்தது internet.org என்ற இணையத்துக்குள் சென்று நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் இலவசம் என்று ..
அதே மாதிரி தான் இப்ப AIRTEL ZERO என்ற ஒன்றின் மூலம் Net Neutrality யை கொண்டுவராங்க !!

ஏன் பாஸ் எல்லா வெப்சைட்டும் இலவசமா ???? அங்க தான ஆப்பு காத்து இருக்கு !!!

எந்த எந்த இணையதள கம்பெனி தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருக்கோ அது மட்டும் தான்
இலவசம் …. எடுத்துக்காட்டுக்கு FLIPKART நிறுவனம் AIRTEL உடன் ஒப்பந்தம் செய்துள்ளது – நீங்க FLIPKART தளத்தை மட்டும் இலவசமா பயன்படுத்திக்கலாம் !!! யார் யார் ஒப்பந்தம் செய்யறாங்களோ அதெல்லாம் இலவசம் !!

அப்ப மத்த இணைய சேவைக்கு பணம் கட்டினா வேலை செய்யுமா ????

அங்கயும் ஒரு ஆப்பு இருக்கு – பணம் கட்டி சேவையை பெறுவதா இருந்தாலும் (எ.க) வாட்ஸ் அப் க்கு தனியாவும்,ஸ்கைப்க்கு தனி வைபருக்கு
தனின்னு கலெக்ட் பண்ணுவாங்க அப்பு !!! இல்லைனா PACKAGE மாதிரி பணம் கட்டனும் !!!

நீங்க ஒரு வீடியோவ இலவசமா பார்க்கணும்னா கூட உங்க மொபைல் ஆப்பரேட்டர் மனசு வைக்கணும் !!! இல்லைனா பணம் கட்டி தான் பார்க்கணும் !!!

பேஸ்புக் ,ட்விட்டர் போன்ற சமூக தளங்கள் முதலில் ஒப்பந்தம் போட்டு இலவசமா நீங்க பயன்படுத்தினாலும் நாளைக்கு அந்த
ஒப்பந்தத்தை ரத்து பண்ணினா … அம்புட்டு தான் தனித்தனியா காசு கட்டனும் !!!

அப்புறம் எதுக்கு இப்படி ஒரு திட்டம் ????

நல்ல கேள்வி !!! ஒரு தொலைத்தொடர்பு நெட்வொர்க் எப்படி சம்பாரிக்கும் ??? – நாம கால் பண்ணும் போது – ரெண்டாவது நாம மெசேஜ் பண்ணும் போது பணம் அவர்கள் சம்பாரிப்பார்கள் ….

இப்ப அப்புடியா ???? மெசேஜ்னா வாட்ஸ் அப் – கால் பண்றதுனா வைபர் – வீடியோ காலிங்க்கு ஸ்கைப் – பேஸ்புக் ட்விட்டர்ன்னு அவன நஷ்டத்துக்கு கொண்டு போனா அவன் சம்பாரிக்க இப்படி ட்ரிக் பண்ணினா தான் உண்டு !!!!

இதை எப்படி விளம்பரம் பண்ணுவான்னா – இலவச இன்டர்நெட் !!! நம்ம ஆளுங்களும் வாயை பிளந்துட்டு பின்னாடி போவாங்கோ !! அதான் விதி !!

இந்த Net Neutrality பற்றி உங்கள் கருத்துக்களை TRAI கேட்டுள்ளது – advqos@trai.gov.in என்ற இணைய முகவரிக்கு மே 15 /2015 க்குள் அனுப்ப சொல்லி இருக்கு !!!

இந்த பதிவை முழுசா படிச்சவர்கள் – இதோட ஆபத்து என்னன்னு புரிஞ்சு இருக்கும் – முடிந்த அளவு பகிருங்கள் !!!

Related Post