Breaking
Wed. Jan 8th, 2025

இந்திய – இலங்கை கூட்டுக்குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இதில், தமிழக அரசு சார்பில் விவாதிக்கப்பட வேண்டியவைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த திங்கட்கிழமை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

அதன்படி, நாளை டெல்லியில் நடைபெறும் கூட்டுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் விஜயகுமார், ஆணையர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள் என தமிழக ஊடகமான தினகரன் செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் குழுவும் நாளை டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள். இவர்கள், டெல்லியில் வெளியுறவுத்துறை செயலாளர் மட்டத்தில் நியமிக்கப்பட்ட குழு கூட்டத்தில், இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசி, நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Related Post