Breaking
Sat. Jan 11th, 2025

இந்­தியா – இலங்­கைக்கு இடையில் பாலம் அமைக்­கப்­பட்டால் அது வடக்கு, கிழக்­கையும் இந்­தி­யா­வையும் இணைப்­ப­தாக அமையும். எனவே இந்­தியா- இலங்­கைக்கு இடையில் பாலம் ஒன்றை அமைத்தால் அதனை தகர்ப்பேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தூய்­மை­யான ஹெல உறும­யவின் தலை­வ­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்­தார்.

கொழும்பு பாகொ­டையில் அமைந்­துள்ள தூய்­மை­யான நாளைக்­கான அமைப்பின் தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

ஆசிய அபி­வி­ருத்­தியின் உத­வியில் இலங்கை–இந்­தி­யாவை நிரந்­த­ர­மாக இணைக்கும் ஹனுமான் பாலம் அமைக்­கப்­படும் என்­பது தொடர்பில் நாம் முன்­ன­ரே அறி­வித்­தி­ருந்தோம். அதற்காக 5.2 பில்­லியன் டொலர் கட­னையும் இந்­தியா ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யி­டத்தில் கோரி­யுள்­ளது.

அது தொடர்பில் பாரா­ளு­மன்ற உரையில் அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல பாலம் அமைக்­கப்­ப­டாது என்றும் இது உண்­மைக்கு புறம்­பான விடயம் என்றும் கூறினார். ஆனால் அதற்கு பின்னர் சில நாட்கள் சென்­றதும் இந்­தி­யாவின் பெருந்­தெ­ருக்கள் அமைச்சர் இந்த பாலம் அமைக்­கப்படும் என்று கூறி­யி­ருந்தார்.

அப்­போது அது தொடர்பில் நாம் அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்­ல­வி­டத்தில் கேள்வி எழுப்­பி­யி­ருந்த போதும் அவர் மறுப்பு தெரி­வித்­தி­ருந்தார். எவ்­வா­றா­யினும் இரு­வரில் ஒருவர் பொய் கூறி­யுள்­ளனர். அவ்­வாறு இல்­லா­விட்டால் இந்­தி­யாவின் ஆக்­கி­ர­மிப்பு எமது நாட்டின் மீது உள்­ளது.

ஆனால் பிர­தமர் இந்த விடயம் தொடர்பில் அலட்­டிக்­கொள்­ள­வில்லை. தேசிய பாது­காப்பு தொடர்பில் பிர­தமரின் அச­மந்த போக்­கையே இது காண்­பிக்­கின்­றது. ஆனால் விட­யத்தின் உண்­மை­யான நிலைப்­பாடு தொடர்பில் அமைச்சர் கபீர் ஹாசீம் எமக்கு தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார்.

இந்­தோ­னே­ஷி­யாவின் ஜகார்த்தா நகரில் இடம்­பெற்ற 12 ஆவது இஸ்­லா­மிய பொரு­ளா­தார மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் கபீர் ஹாசீம் கேட்­கப்­பட்ட கேள்வி ஒன்­றுக்கு அவர் பதி­ல­ளித்த வேளை, இந்­தியா மற்றும் இலங்­கைக்கு இடையில் பாலம் அமைப்­பது தொடர்­பாக தகவல் வெளி­யிட்­டுள்ளார்.

இந்தப் பாலத்தின் மூலம் இலங்கை மற்றும் இந்­தியா இணைக்­கப்­படும் எனக் கூறிய போதும், உண்­மையில் வடக்கு மற்றும் இந்­தி­யாவின் தமிழ்­நாடு ஆகிய பகு­தி­களே இணைக்­க­ப்படும்.

இந்­தி­யாவில் வேலை­யற்றோர் தொகை 50 மில்­லியனாகவும் இலங்­கையின் மொத்த சனத் தொகை 21 மில்­லி­ய­னாகவும் உள்­ளது. இதனால் இந்­தி­யா­வி­லுள்ள வேலை­யற்­ற­வர்கள் இலங்­கைக்கு வரு­வார்கள். அதேபோல், தமிழ்­நாட்­டினர் இடை­வி­டாது வடக்­கிற்கு வரு­வார்கள். இதனால் சிங்­க­ள­வர்­க­ளுக்கு இருக்கும் ஒரே ஒரு நாட்டையும் இழக்கும் ஆபத்து ஏற்­ப­டலாம்.

இவ்­வாறு பல பிரச்­சி­னைகள் உள்ள இந்தப் பாலத்தை நிர்­மா­ணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. அவ்வாறு நிர்மாணிப்பதாயின் நிச்சயம் மக்கள் வாக்கெடுப்பு அவசியம். அவ்வாறு இல்லாது பாலம் நிர்மாணிக்கப்படுமாயின் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அதனை தகர்க்க நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார்.

By

Related Post