Breaking
Sun. Dec 22nd, 2024

இலங்கையில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடில் அதிபர் மைதிரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்;இரண்டாண்டுக்கு ஒரு முறை உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடத்தப்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் நவமணி நாளிதழுக்கு சிறப்பு பேட்டி

`திருச்சி எம்.கே. சாஹூல்ஹமீது –

இலங்கைக்கு இந்திய ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. சாஹூல்ஹமீது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விஜயம் செய்தார். பின்னர் பல்வேறு அரசியல் முக்கிய முஸ்ஸிம் தலைவர்களை சந்தித்து பேசினார். அந்த வகையில் இலங்கை பாராளுமன்ற வாளாகத்தில் இலங்கையில் நடைப்பெறும் அரசியல் நிலவரம் மற்றும் தமிழகத்தில் உள்ள முஸ்லிம் தலைவர்களுடைய அரசியல் பணிகள் குறித்தும் இருவரும் பகிர்ந்துக் கொண்டனர். பின்னர் நவமணி நாளிதழுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வர்த்தகம் மற்றும் கைத் தொழில் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் எமது இந்திய செய்தியாளர் திருச்சி எம்.கே. சாஹூல்ஹமீது பல்வேறு கேள்விகளை முன் வைத்தார் அதற்கு பதில்அளித்தார்.

கேள்வி ; உங்களுடைய சீன பயணம் குறித்துதாங்கள் கூறுவதென?.

பதில் ; என்னுடைய பயணத்தின் நோக்கம் வெற்றிப் பெற்றது இலங்கையை வர்த்தரிதியாக உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் சீனாவில் உள்ள தொழில் அதிபர்களை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்தேன். எனது அழைப்பை ஏற்று விரைவில் இலங்கை வருவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.அவர்கள் விஜயம் முலம் இலங்கை வர்த்தகம் முலமாக முன்னேறவாய்ப்பாகஅமையும்.

கேள்வி ; உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடுஉங்கள்த லைமையிலும், நீங்கள் முன்னின்று நடத்துவதாக வரும் தகவல்கள் உண்மையானதா?.

பதில் : இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் மாநாடு 1966 ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்டது. மருதுமுனையில் நடைப்பெற்றது. அதன் பின்னர் 2002ஆம் ஆண்டு உலக இஸ்லாமிய மாநாடு மிகசிறப்பாக நடைப்பெற்றது. இஸ்லாமிய இலக்கிய மாநாடு 13 ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம் கலாச்சார அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கிம் தலைமையில் நடைப்பெற்றது, அதன் பின்னர் இந்த மாநாடை நீண்ட நாட்களாக யாரும் நடத்த முன் வரவில்லை பல்வேறு முஸ்லிம் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளார்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் என்னிடம் உலக இஸ்லாமிய தமிழக இலக்கிய மாநாடு நட்த்தப்பட வேண்டும் என்றும் இந்த ஆண்டு ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா பொன்விழா கொண்டாடப் படவேண்டும் என்றும் என்னிடம் வந்து கூறினார்கள். முன்னர் காலத்தில் உமர் ரலி, அபுபக்கர் ரலி ஆகியோர்க் கூட கலைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். மேலும் கவிதைகளை விரும்பி கேட்ககூடியவர்களாகவும் இருந்தனர். அவ்வாறான பரம்பரையை சார்ந்த இந்த இஸ்லாமியசமுதாயம் கலைதுறையில் அவர்கள் சார்ந்த மொழியிலே உயர்ந்த இடங்களிலே இருக்கிறார்கள்.

இஸ்லாமிய சமுதாயத்தில் கட்டாய அடிப்படையில் இந்த இலக்கிய மாநாடு நடத்துவது பற்றிபல கட்ட ஆலோசனைக்குப் பிறகு எங்களது கட்சியின் சார்பில் இந்த மாநாட்டை நடத்துவது என முடிவு செய்த படி இந்த இலக்கிய மாநாடு நீண்டகால இடைவெளிக்குப் பிறகு இந்த வருடம் டிசம்பர் மாதம் 10, 11, 12 ஆகிய திகதிகளில் என்னுடைய தலைமையில் நடைப்பெற உள்ளது.

இந்தமாநாடு இரண்டாண்டுக்கு ஒருமுறை தொடர்ந்து நட்த்துவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது.இந்த இலக்கிய மாநாட்டில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், மற்றும் பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இருந்து இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் இலங்கையில் உள்ள பல்வேறு முஸ்லிம் கலைஞர்கள் மற்றும் அறிஞ்கர்களை கவுரவப்படுத்த இருக்கிறார்கள். இந்த மாநாட்டின் மூலம் இலங்கையில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞ்ர்கள், சமுக ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியில் உள்ளதோடு மேலும் இளைஞ்ர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த மாநாடுஅமையும். இந்த மாநாடு ஆயுத்த பணிகள் நடைப்பெற்று வருகிறது.

இலங்கையில் உள்ள எங்கே எல்லாம் முஸ்லிம்கள் எழுத்தாளர்கள் கலைஞ்ர்கள் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய ஒவ்வொரு மாவட்ட்த்திற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பிரதம அகதியாக அதிபர் மைதிரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங் மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளஉள்ளனர்.

கேள்வி ; இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல் வந்தால் இந்த அரசாங்கத்தோடு கூட்டணியில் போட்டியிடுவிர்களா அல்லது தனித்து போட்டியிடுவிர்களா?.

பதில் ; தேர்தல் தேதி அறிவித்த பிறகு தான் எங்களோடைய நிலைப்பாடு குறித்து முடிவு செய்வோம். எங்கள் கட்சிக்கும் நாட்டுக்கும் மற்றும் மக்களுக்கும் எதுநல்லதோ அந்த மாதிரியான முடிவை எடுப்போம்.

கேள்வி ; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷரப் பண்புகள் கட்சியில் எதும் இருக்கிறாதா?.

பதில் ; எம்.எச்.எம். அஷரப் என்பது இந்த நாட்டின முஸ்லிம்களுடைய அரசியல் வானவியலில் அவர் ஒர் உத்தமர் அவரிடத்தில் நிறைய கனவுகள் முஸ்லிம் சமுதாயத்தை உயர்த்துவதைப் பற்றி இருந்த்து. அந்த கனவுகளை அடைவதற்காக ஒர் கட்சியை ஆரம்பித்து இந்த சமுதாயத்தை ஒன்றுப்படுத்தி முஸ்லிம்களாளேயே இந்த நாட்டில் ஆட்சி அமைக்கலாம், அல்லது ஆட்சியுடன் பங்காளிகளாகவும் முஸ்லிம்களுடன் சேர்த்து ஆட்சி அமைக்கலாம் என்னும் நிலை எம்.எச்.எம். அஷரப் அவர்கள் முயற்சியின் காரணமாகவே எற்ப்படுத்தப்பட்டது. அப்படிப் பட்ட உத்தமர் முத்தஅரசியல்ஞானி என்றுக் கூட சொல்லலாம். அவருடைய வபாத்துக்குப் பிறகு அவருக்காக து ஆ செய்துக் கொண்டு இருக்கிறோம். அவருக்கு சொர்க்கம் கிடைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து து ஆ செய்துக் கொண்டு இருக்கிறோம்.

அவர் கண்ட கணவுகள் இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. அவர் கண்ட கணவுகளை நிறைவேற்ற பல முயற்சிகளை செய்துவருகின்றோம் . ஆனால் அவருடைய புகைப்படத்தை கொண்டு அவருடைய பழைய பேச்சுகள் அவருடைய பழையக விதைகளை போட்டு நாங்கள் அரசியல் டத்தவிரும்பவில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பது புதிய கட்சி எங்கள் கட்சிக்கு யாப்பகம் என்று ஒன்று அமைத்து இருக்கின்றோம். கட்சிக்கு என்று ஒரு கொள்கை இருக்கின்றது. அஷரப் விட்டுசென்ற பணிகளை ஒரு யாப்பாக எடுத்துக் கொண்டு நடைமுறைப்படுத்த நாங்கள்முயற்சிகள்எடுத்துவருகின்றோம்.

கேள்வி ; இலங்கையில்முஸ்லிம்கள் வர்த்தக ரிதியாக எப்படிஇருக்கிறது?.

பதில் ; இலங்கையை பொறுத்த வரை சிங்களர்கள், தமிழர்கள், சிறுபான்மையை சார்ந்த முஸ்லிம்கள் ஆகியோர் வர்த்தகரிதியாக எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் எந்த பாகுபாடும் கிடையாது இந்தஅரசாங்கம் எந்தபாகுபாடும்இல்லாமல்சமத்துவத்தோடுசெயல்ப்பட்டுவருகிறது.

கேள்வி ; உங்கள் பகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களுடைய நிலைமை எவ்வாறுஉள்ளன?.

பதில் ; எங்கள் பகுதியை சார்ந்தவர்கள் விடுதலைப் புலிகளால்விரட்டியடிக்கப்பட்ட ஒரு லட்சம் பேர்அகதி முகாம்களில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் குடியேற்றம் பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது. கடந்த அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அரசு சரியாக செய்யாத்தால் நான் தன்னந்தனியாக நின்றுக் கொண்டு அவர்களை குடியேற்றும்வேலைளை பார்த்துக் கொண்டுவருகின்றேன். 225 பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். ஆனால் நான் மட்டும் தான் இரவுப் பகலாக அவர்களை அகதிகள் முகாம்களில் வெளிவருவதற்கு முயற்சி செய்கிறேன்.

ஆனால் கடந்த ஆட்சியால் இந்த ஒரு லட்சம் மக்கள் கைவிடப்பட்டார்கள். இவர்களைப் பற்றி இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் முஸ்லிம் நாடுகள் என்னவென்று கேட்கவில்லை இதனால் இந்த நாட்டில் எல்லோருக்கும் கடமை இருக்கிறது. இந்த நாட்டிற்கு தலையீடு செய்தவர்கள் இந்த நாட்டின நிரந்தரமான தீர்வு காண்பவர்கள் இந்தநாட்டினுடைய நல்லிணக்கத்தை எற்படுத்துள்ளவர்கள் எல்லோரும் ஒன்றினைந்து ஒரு லட்சம் அகதிகளாக உள்ளவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களுக்கு தேவையான காணிகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள், அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்றவைகளுடன் அவர்கள் குடியேற்ற தார்மிக பொறுப்பு எல்லா நாடுக்களுக்கும் பொறுப்பு உள்ளது. இந்த அரசாங்கத்தை தூண்டும் விதமாக நாடுகள் அழுத்தம் கொடுக்கலாம் .

பொதுவாக இந்தியா மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு இந்த ஒரு லட்சம் அகதிகளை குடியெற்ற வேண்டும். என்ற அவசியத்தை இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்ததை கொடுக்கும் பொறுப்புகள் உள்ளது. மிகவும் கடுமையான பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது. அந்த பணியை அவர்கள் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.இலங்கையில் தமிழ் முஸ்லிம்கள் சிறுபான்மைகள் சிங்கள என்ற பேதங்கள் கிடையாது விடுதலைப் புலிகள் தான் முஸ்லிம்களை காத்தான்குடியில் பள்ளிவாசல்களில் தொழுகையில் இருக்கும் சமயத்தில் கொடுரமாக சுட்டுக்கொண்டார்கள். ஆனால் தமிழ் மக்கள் சுட்டுக் கொள்ளவில்லை. தமிழ் மக்கள் வேறு விடுதலைப் புலிகள் வேறு. புலிகள் செய்த நல்ல விடயங்களை தமிழ் மக்கள் விரும்பினார்கள். மற்றும் ஆதரித்தார்கள்.

புலிகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டும் அந்தஸ்து அந்த காலத்தில் தமிழ்ம க்களுக்கு இருக்கவில்லை. புலிகள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டினால் அடுத்த நாளே அவர் விட்டுக்கு அவர் பிணமாக வந்து சேரும் நிலைமை இருந்தது. வடபிலத்து முஸ்லிம்கள் வெளியேற்றும் போது முழு தமிழ் மக்களும் அழுதார்கள் வேதனைப்பட்டார்கள்.இந்த வடபிலத்து முஸ்லிம்களை வெளியேற்ற செய்தது புலிகள் தான். ஆனால் இப்பகுதியில் இப்போது புலிகள் கிடையாது மீள்யேற்றத்திற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றன. முஸ்லிம்கள் மீள்யேற்றத்துக்கு எதிராக விடுதலைப் புலிகளின் ஆதராவான அரசியல் தலைவர்கள் இதை தடுக்கிறார்கள்.குறிப்பாக என்னை இனவாதியாக மற்றும் மதவாதியாக பார்க்கிறார்கள். நியாத்திற்காக போராடுகிறேன் என்ற காரணத்தினால் என் மீது பல வழக்குகளையும்,துன்பங்களையும், கஷ்டங்களையும் இந்த மக்களுக்கு சேவை செய்வதை தடுப்பதற்காக வேண்டியே என் மீது வழக்குகள் போடப்படுகிறது.

என்ன சதி செய்தாலும் எத்தனை வழக்குகள் போட்டாலும் எவ்வாறல்லாம் திட்டங்களை தீட்டினாலும் என்னை இந்த மக்களுக்கு பணி செய்வதை அகற்ற சதி செய்தாலும் இன்ஷா அல்லாஹ் என் முச்சு உள்ள வரை நானும் என்னுடைய கட்சியும் அத்தனை மக்களையும் சொந்த பூமியில் கொண்டு போய் குடியேற்றும் பணியை பல்லாயிரக்கணக்கான வீடுகளையும் அனைத்தையும் செய்து கொடுப்பேன். இடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பள்ளிவாசல்களை கட்டிக்கொண்டு இருக்கின்றோம். ஏழுபதுக்கும் மேற்ப்பட்ட அரபிப் பாடசாலைகளை புனரமைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

இருபதாயிரத்துக்கு மேற்ப்பட்ட விடுகளை புனரமைத்துக் கொண்டு இருக்கின்றோம். மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள் அரபு நாடுகள் உதவியுடன்செய்து வருகின்றோம். இதை அனைத்தையும் செய்வதற்கு இந்தஅரசாங்கத்திறுகு தார்மிக பொறுப்பு உள்ளது. வடமாகணத்தில் முஸ்லிம் நாடுகள் உதவியுடன் முப்பதுக்கும்மேற்ப்பட்ட குடும்பங்களை குடியமர்த்திஇ ருக்கின்றோம்.

இலங்கையில் சிங்களர்கள், தமிழர்கள், தமிழ் முஸ்லிம், சிறுபான்மையை சேர்ந்தவர்கள் ஒன்றாக இருந்தால் தான் இந்த நாட்டில் எந்த பிரச்சனையும் வராது.எதிர்க்காலத்தில் இந்த நாடு வளர்ச்சி அடைந்த நாடாக திகழும். வடக்கும் கிழக்கும் பிரிந்து இருக்கின்றது. ஆனால் சிலர் சொல்கிறார்கள் இரண்டையும் இனைக்க வேண்டும் என சொல்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெருமான்மையாக வாழ்கிறார்கள். அந்த முஸ்லிம்கள் வடக்கு மாகாணத்தி ல்சேர்க்கப்படும் போது வடக்கு மாகாணம் பெரும்பாண்மை மாகாணமாக மாறிவிடும். கிழக்கு மாகாணம் சேர்க்கப்படுவதால் முஸ்லிம்களுக்கு இருந்த கிழக்கு மாகாணம் இல்லாத மாகாணமாக மாறிவிடும். இதனால் இங்குள்ள மக்களுக்கு பெரும்து ரோகம் இழைக்கப்படும். வடக்கையும் கிழக்கையும் நாங்கள் பிரிக்கவும் இல்லை சேர்க்கவும் இல்லை இந்தியா தான் கொடுத்தது. இலங்கை நீதிமன்றம் தான் பிரித்து வைத்தது. பிரிக்கப்பட்ட மாகாணத்தை அப்படியே இருக்கட்டும் அதிக அதிகாரங்களை அதிகமாக கொடுங்கள்.

வடக்கே தமிழ் சகோதர் முதலமைச்சராக இருக்கிறார். கிழக்கே முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக இருக்கிறார். ஏனைய மாகாணங்களில் சிங்களத்தை சேர்ந்தவர்கள் முதலமைச்சராக இருக்கிறார்கள். பத்து சதவிதம் முஸ்லி ம்கள் வாழ்கிறார்கள். பன்னிரண்டு சதவிதம் பேர் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆளுக்கு ஓர் முதலைச்சர் இருக்கிறார்கள். ஏனைய ஏழு மாகணங்களில் மற்ற சமுகத்தவர்கள் முதலமைச்சராகஇருக்கிறார்கள் ஆக்கப்பூர்வமாக இந்த விகிதாச்சர முறை அமைந்து இருக்கினறது.

கேள்வி ; இலங்கையில் அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றம் கொண்டு வருவதாக இந்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அதைப் பற்றி உங்கள் கட்சியோடைய நிலைப்பாடு என்ன?.

பதில் ; தேர்தல் முறை மாற்றும் சட்டத்தை மாற்ற நினைக்கிறார்கள் இன்று பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளுர்ராட்சி மன்றங்களிலே முஸ்லிம்கள்,தமிழர்கள் மலையக தமிழர்கள், கிறிஸ்தவர்கள், பெளத்தவர்கள், சிங்களர்கள் எல்லோரும்சதவீத அடிப்படையில் இருந்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்று தேர்தல் முறை ஏற்படுத்தி இருக்கிறது. சிறிய கட்சிகள், சிறுபான்மை கட்சிகள், சிறிய எண்ணிக்கையிளான பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு இருக்கின்ற கட்சிகளுக்கு இன்று ஆட்சி அமைக்க இரண்டு பெரிய கட்சிகளோடு எதாவது ஒன்று ஆட்சியமைக்க சிறுபான்மை அல்லது சிறிய கட்சிகள் அதரவு தேவைப்படுகிறது. அவ்வாறு வருகின்ற பொழுது இணைந்த ஆட்சியமைக்கின்ற பொழுது எல்லா இணங்களும் சமத்துவமாக வாழ்கிறார்கள்.

எனவே இதை இல்லாமல் ஆக்கி சிறிய கட்சிகள் சிறுபான்மை கட்சிகள் ஆதரவு இல்லாமல் பெருபான்மை கட்சி ஒன்று மாத்திரம் ஆட்சி அமைக்கும் நிலைமை கொண்டு வருவதற்கான தேர்தல் முறை மாற்றத்தைப் பற்றி சிலர் கருத்து சொல்கிறார்கள்அவ்வாறான முறை வருவதை கடுமையாக எதிர்க்கிறோம்.

வரக் கூடிய முறை பெரும்பான்மை சிறுபான்மை சேர்ந்து ஆட்சி ஆளுகின்ற ஆட்சி செய்கின்ற நல்லது செய்கின்ற நல்லது நல்ல ஆட்சி முறை வரவேண்டும் என்பது தான் எதிர்ப்பார்ப்பு. அதிபர் மைதிரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங் ஆகியோரிடம் நாங்கள்தெளிவாக சொல்லி இருக்கின்றோம். எந்த தீர்வாக இருக்கலாம் எந்த ஒர் இனத்துக்கும் பாதிப்பு இருக்ககூடாது என்றும். தேர்தல் முறை மாற்றமாக இருக்கலாம். ஆனால் யாரும் பாதிப்பாக இருக்ககூடாது. எந்த ஒர் இனத்துக்கும் ஆபத்தோ அல்லது அநியாமோ நடக்கும் முறை வந்துவிடக் கூடாது.

எனவே இந்த இரண்டு விடயத்திலும் இரண்டு தலைவர்களும் சிறுபான்மை சமூகம் ஆட்சி பீடத்திற்கு அமருவதற்கு எவ்வாறு ஒட்டு மொத்தமாக உதவி செய்தார்களோ அதேப் போல சிறுப்பான்மை சமுதாயத்திற்கு பாதிப்பு வராத வகையில் தேர்தல் அதிகார பகிர்வை இந்த நாட்டுக்கு வழ்ங்க வேண்டும் என அவர்களிடம் வேண்டி இருக்கின்றோம். எக்காரணத்தைக் கொண்டும் முஸ்லிம்களுக்கு பாதிப்பு வராத வகையில் தேர்தல் மாற்றம் முறையை கொண்டு வருவதற்கு முயற்சி செய்வோம். தேர்தல் முறை மாற்றும் முறை சட்ட்த்தில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு வந்தால் இந்த சட்டத்தை கடுமையான முறையில் எதிர்ப்போம்

கேள்வி : இலங்கைக்கும்இந்தியாவுக்கும்நட்புறவுகள் எப்படிஇருக்கிறது ?

பதில் : இலங்கை இந்தியா பொறுத்த வரை சகோதரர்கள், மற்றும் ஒரே குடும்பத்தை போன்று நட்புறவாகஇருக்கிறோம். இந்தியாவும் இலங்கையும் என்பது கலாச்சாரத்தினால் வியாபாரத்தினால் மற்றும் மொழியால் அல்லது எங்களுடையம தங்கள் பொதுவாக எல்லா விடயங்களிலும் எங்களுக்கிடையே பெரிய உறவு இருக்கிறது. வியாபாரமான தேயிலை தொழிலாளர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் தான் இலங்கைக்கு பெரிய அந்நிய செலவாணியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். எல்லா அரசியல் துறையை சேர்ந்தவர்களும் மற்ற விசயங்களிலும் சுமூகமான உறவுகள் இருந்து வருகிறது. நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தியா இலங்கையில் உள்ள தமிழ்மக்கள் முஸ்லிம்மக்கள், சிங்கள் மக்கள், ஒரே கண்ணோட்டத்தோடு பார்த்து எதிர்காலத்தில் தீர்வு மற்றும் நல்லிணக்க விஷயங்கள் அபிவிருத்தி விஷயங்கள் பல விடயங்களில் இந்தியா விரும்புகின்ற இலங்கையில் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களையும் எதிர்பார்கிறோம்.எல்லா துறைகளிலும் இந்தியா இலங்கை விரும்புகின்ற நட்புறவுகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

கேள்வி : இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு இந்த அரசாங்கம் ஏன் அனுமதி அளிக்கமுன் வரவில்லை ?

பதில் : இது இலங்கையில் நடந்த பிரச்சனை பொலீஸ்இருக்கிறது. மற்றும்உள்ளூர் நீதிமன்றம்இருக்கிறது. 19வதுதிட்டத்தை இந்த அரசாங்கம் கொண்டு வந்தபோது எங்களுடையநாட்டிலேநீதித்துறை, பொலீஸ்துறை, அரசாங்கதுறை இவ்வாறாகசுவாதினமாக கமிஷன்போடப்பட்டுள்ளது. இலங்கையிலே முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய அமைச்சர்கள் யாராவது ஊழல் செய்திருந்தால் ஊழல் ஆணை குழுக்கு கடிதம் அனுப்பினாலே அவர்கள் வர வழைத்து விசாராணைக்கு உட்படுத்த உள்ளார்கள்.அந்த வகையில் இலங்கையில் எல்லா துறைகளிலும் கண் விழிக்கப்பட்டு நேர்மையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே அந்த வகையிலே இலங்கை பிரச்சனை எங்களுடைய பிரச்சனை.

போர் குற்றங்கள் குறித்து இலங்கையில் தான் விசாரிக்க வேண்டும். உள்ளூர் விசாரணையை ஐ.நா.சபை, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பியா இந்தியா ஆகிய நாடுகள் உன்னிப்பாக பார்த்து கொண்டு தான் இருக்கிறது. இந்த உள்ளூர் விசாரணையில் நம்பிக்கையில்லை என்றால் மேல்முறையீடு செய்யலாம். உள்ளூர் விசாரணைக்கு முதலில் முன்னுரிமை அளியுங்கள். அப்போது தான் எல்லா விஷயமும் தெரிய வாய்ப்பாக அமையும். எனவே போர் குற்றங்கள் குறித்து உலக நாடுகள் கண் விழித்து பார்த்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

By

Related Post