இந்திய சுதந்திர தினவிழா இன்று (15) இந்திய நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார்.
பிரதமர் மோடியின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றினார்.
கொடியேற்றிய பிறகு பிரதமர் மோடிக்கு முப்படையினர் அணிவகுப்பை பார்வையிட்டார்.
அதன் பின்பு பேசிய பிரதமர் மோடி இந்தியா, வெளிநாடுகளில் வாழும் 125 கோடி இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்தியாவின் வயது 70 அல்ல, காலனி ஆதிக்கத்திற்கு பிறகு சிறந்த இந்தியாவின் வயது 70 என கூறினார். சுதந்திரம் எளிதில் கிடைத்துவிடவில்லை அனைத்து இந்தியர்களும் போராட்டத்தில் பங்கேற்றதன் மூலமே சுதந்திரம் கிடைத்தது என மோடி பெருமையுடன் தெரிவித்தார்.
சுதந்திர தின விழாவின் போது அருண் ஜெட்லி, குலாம் நபி ஆசாத், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டார்கள்.
இந்திய பிரதமர் சுதந்திர தின உரையாற்றும் செங்கோட்டை மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக, பாரம்பரியம் மிக்க டெல்லி செங்கோட்டை மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெல்லி போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும், இன்று வரை, சூரிய அஸ்தமனத்துக்கு பின்பு ஜொலிக்கும் வகையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.