Breaking
Sat. Dec 28th, 2024
கல்பிட்டி, தலவில, கப்பலடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் இந்திய பிரஜை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபரின் பையில் இந்திய நாணயத்தாள்கள் காணப்பட்டதாகவும், இவர் இந்தியமீனவராக இருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துவருகின்றனர்.

By

Related Post