இந்திய-மியன்மர் எல்லையை மையமாக கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
இந்திய வானிநிலை ஆய்வு மைய தகவல்படி, மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் வடமேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மேற்கு வங்கம், நாகலாந்து, மணிப்பூர், உட்பட கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஒருவர் உயிரிழந்து இருப்பதாகவும், 8 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.