Breaking
Sun. Mar 16th, 2025

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 13 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களை மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எல்லைதாண்டி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த 6 ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் 13 மீனவர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post