Breaking
Sun. Dec 22nd, 2024
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று இரவு (08) கொழும்பில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பெளசி மற்றும் முன்னாள் மேல்மாகாண சபை ஆளுநர் ஆசாத் சாலி உள்ளிட்டோருடன், மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் நாயகம் சுபைர்தீன், பொருளாளர் ஹுசைன் பைலா, சிரேஷ்ட சட்டத்தரணிகளான சஹீட், ருஸ்தி ஹபீப், கட்சியின் முக்கியஸ்தர்களான கலாநிதி யூசுப் மரைக்கார், கலாநிதி அனீஸ், மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், ரியாஸ் சாலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

Related Post