இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்துள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடனும், இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதுடன், மேலும் பல முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
அத்துடன், இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்படவுள்ளதாக எட்கா உடன்படிக்கை தொடர்பிலும் கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளதாக அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.