Breaking
Mon. Dec 23rd, 2024
இந்தோனேஷியாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு தயாராகவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
ஜூன் 10 ம் திகதி கிடைத்த அறிவித்த லுக்கிணங்க இந்தோனேஷிய தீவொன்றில் 54 பேர் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். இவர்கள் இலங்கையர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் அகதிகளாகத் தஞ்சமடைந்தவர்களாவர்.
ஐ. நா. வின் தஞ்சமடைந்தோருக்கான அடையாள அட்டை இவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்பிவர விருப்பமற்றவர்களாகவே உள்ளனர்.
இவர்களில் எவராவது மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவிப் பார்களானால் அது தொடர்பான நடவடிக் கைகளை வெளிவிவகார அமைச்சு மேற் கொள்ளும். இலங்கை தூதரகத்தின் மூலம் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post