இந்த ஆண்டு இறுதிக்குள் மருந்து வகைகளின் விலைகள் 50 சதவீதத்தால் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புதிய மருத்து வகைகள் சட்டத்தின் விதிகள் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் அதிகளவிலான மருந்துகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய சட்டத்துக்கு அமைய மருந்துகளை விலை கொடுத்து வாங்குவோரைப் பாதுகாப்பது தொடர்பாக அதிகாரசபை ஒன்று நிறுவப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சில மருந்துவகைகளில் 200 தொடக்கம் 300 சதவீதம் இலாபம் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. எதிர்காலத்தில் மருந்துகளை இறக்குமதி செய்வோருக்கு 75 சதவீதத்துக்கு மேற்பட்ட இலாபம் பெறுவதற்கு இடமளிக்காத சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.