Breaking
Tue. Dec 24th, 2024

ஜின்னாபுரம் ஆலங்குடா ஏத்தாளையில் வசித்துவரும் ஏ.எஸ்.கபூர் என்பவரின் இரு மகள்களான பாத்திமா றிகாஸா வயது 12, பாத்திமா றிமாஸா வயது 02 ஆகிய இருவரும் லியுகோமியா நோயினால் பீடிக்கப்பட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கான சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள 25 இலட்சம் ரூபா செலவாகும் என மதுரை வைத்திய  நிபுணர் சிபார்சு செய்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன் இப்பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதுடன், வறுமைக் கோட்டில் வாழும் இவர்களின் தந்தை முச்சக்கரவண்டி ஓட்டி தனது குடும்பத்தை நடத்தி வருகிறார்.

எனவே இப்பிள்ளைகளின் சிகிச்சைக்கான நிதியுதவிகள் தாராள மனம்  படைத்தோரிடமிருந்து கோரப்படுகிறது.

கணக்கு இல: 71449879 BOC

தொடர்புகளுக்கு: 0723 584 862

Related Post