Breaking
Fri. Dec 27th, 2024

எதிர்வரும் 17 ஆம் திகதி தகுதியானவர்கள் தெரிவு செய்யும் பாரிய பொறுப்பு வாக்காளர்களிடம் இருப்பதாக சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தகுதியானவர்களை சில கட்சிகள் நிறுத்தவில்லை என்பதால், வாக்காளர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது.

வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நல்லவர்களுக்கு மாத்திரம் வாக்களியுங்கள்.

இந்த தேர்தலானது நபர்களுக்கு இடையிலான தேர்தல் அல்ல. கட்சிகளுக்கு இடையிலான தேர்தலும் அல்ல. இது கொள்கைகளுக்கு இடையிலான தேர்தல். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான தேர்தல்.

போதைப் பொருள் விற்பனையாளர்கள், எத்தனோல்காரர்கள், ஊழல்வாதிகளுக்கு பதிலாக படித்த, புத்திசாலிகள் உட்பட சிறந்தவர்களை, வாக்காளர்கள் தெரிவு செய்ய வேண்டும் எனவும் மாதுளுவாவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post