முஹம்மத் சனாஸ்
இன்று என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று செயற்படும் நபர்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.நான் அணிந்திருக்கும் இந்த பதவிகள் என்கின்ற அணிகலன் மக்களை பாதுகாக்கவே,எமது இந்த மக்களின் தேவைகள் பூர்த்தியாக்கப்படும் எனில் இதனை கழட்டிவிட நான் தயாராக இருக்கின்றேன்.அதே போல் இந்த மக்களுக்கு கவசமாக செயற்படக் கூடியவர்கள் தலைமை தாங்க தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் முசலி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள வெளிமல கிராமத்திற்கான உள்ளக பாதைகளை புனரமைக்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சரின் இணைப்பு செயலாளர் அலிகான் ஷரீப் தலைமையில் நேற்று மாலை இடம் பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அவர் பேசுகையில் –
இந்த கிராமத்தின் உருவாக்கத்தின் பின்னணயில் பலரது தியாகங்கள் இருக்கின்றன.இந்த மக்கள் எனக்கு வழங்கியுள்ள ஆணையினால் இதனை கொண்டுவரமுடிகின்றது.இதனை நான் கொண்டுவர முயற்சித்தி போது அதற்கும் தடைகளை ஏற்படுத்துகின்றனர்.திறப்பு விழாக்களை நான் நடத்த வேண்டும் என்ற கோறுவதில்லை.அந்தந்த நிறுவனங்கள் இந்த அபிவிருத்திகளை செய்கின்ற போது மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் தலைவராக இருக்கின்ற என்னை அழைத்து அதனை செய்கின்றனர்.ஆனால் நாங்கள் இந்த மக்களுக்காக கொண்டுவந்த அபிவிருத்திகளை அதிகாரிகளை அச்சுறுத்தி திறப்பதற்கு முயற்சிக்கின்றனர்.இவர்களும் வந்து இந்த திறப்பு விழாக்களில் கலந்து கொள்வதில் எந்தவித தடைகளையும் நாம் ஏற்படுத்தியதில்லை.
ஆனால், சில தனிநபர்களின் கருத்துக்களை சில நிமிடங்களாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து எனக்கெதிராக பேசுகின்றனர்.இவ்வாறு பேசுபவர்களுக்கும் நாம் உதவிகளை செய்துள்ளோம்.நாம் செய்கின்ற உதவி அவர்களிடம் பிரதி பலன்களை எதிர்பார்த்து அல்ல என்பதையும் அவர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
வெளிமலை மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.அவற்றை நாம் கட்டம் கட்டமாக தீர்து வைத்துவருகின்றோம்.நீண்ட நாட்களாக தேவையாக இருந்துவந்த உள்ளக பாதைகள் தற்போது புனரமைக்கப்பட இருக்கின்றது.
எனவே, நாம் இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.அதற்கு முன்னுரிமையளித்து நாங்கள் செயற்பட பழகிக் கொள்ள வேண்டும்.இது எமது கடமையுமாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.
இந்த நிகழ்வில் முன்னால் முசலி பிரதேச சபை தவிசாளர் எஹியான்,பிரதி தவிசாளர் மௌலவி பைரூஸ்,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் குரூஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.