Breaking
Thu. Jan 9th, 2025

உலமாக் கட்சித் தலைவர் முபாறக் மௌலவிற்கு மக்கள் வாக்களிக்காவிட்டாலும் அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக அநியாயங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது அவரின் கொதிப்புக்கள் மக்களை சற்று ஈர்த்திருந்தது.இப்போது எல்லாம் புஸ்வனமாகி போய் விட்டது.யாருக்கு ஏசினாரோ?அவருக்கே வக்காலத்து வாங்குகிறார் முபாறக் மௌலவி.

எதிரணிகள் பொது வேட்பாளரை தேடி அலையும் போது கூட இவர் எவ் எதிர்க் கருத்தினையும் கூற வில்லை.பொது வேட்பாளர் தேர்வான பிறகே பல அரசியல் மாற்றங்கள் நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது.அந்த நேரம் கூட அரசுடன் இருக்கின்ற மு.கா விமர்சித்தே வந்தார்.திடீர் என என்ன நடந்தது?

அளுத்கமை பற்றி எரிந்தது பொது யாவரும் அரசியல் வேறு பாடின்றி ஒரு மித்து குரல் கொடுத்த பொதும் மௌலவி என்னவோ அரசினையும் மு.கா இணையும் தான் விமர்சித்தார்.விரால் இல்லாக் குளத்திற்கு குரட்டை மீன் தலைமை தாங்குவது போன்று அரசிற்கு எதிரான சக்திகள் நலிவடைந்து காணப் பட்ட போது இவரை ஐ.தே.க தலையில் தூக்கி வைத்து ஆடியது.குறட்டையும் இல்லா விட்டால் குளத்திற்கு என்ன மரியாதை? தென் மேல் மாகாண சபைத் தேர்தலில் இவரிற்கு ஐ.தே.க முக்கிய பாத்திரம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மௌலவி எவ்வளவு தான் குதித்தாலும் எல்லாம் முக நூலோடும்,பத்திரிகையோடும் அடங்கி விடும்.மௌலவிக்கு அம்பாறை மாவட்டத்தில் ஒரு பகிரங்க விளம்பரம் தேவை.எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் தானே காட்டிற்கு  ராஜா என்பதால் இவ் விளம்பரத்தை ஜனாதிபதித் தேர்தலில் அடையலாம் என மிகவும் நம்பி இருந்தார்.அனைத்தும் தன்னை வைத்தே நடக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தார்.ஆனால்,இப்போது நிலைமை அவ்வாறில்லை சாய்ந்தமருதில் முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் மீரா சாஹிப்,கிழக்கு மாகாண பொது எதிரணி பிரச்சார பொறுப்பாளராக முன்னாள் பிரதி அமைச்சர் சேகு இஸ்ஸதீன்,பொத்துவிலில் எஸ்.எஸ்.பி மஜீத் என பலரும் ஏன்?மு.கா இன் ஆதரவும் இன்றோ? நாளையோ? இப்படியே சென்றால் மௌலவியினை எங்கு கொண்டு மக்களும் கட்சிகளும் வைக்கும் என்று யாவருக்கும் தெரியும்?

அரசை மக்கள் எதிர்த்திருப்பதால் அரசியல் வாதிகள் மக்களிடம் அரசை கொண்டு சேர்க்க அஞ்சுகின்றனர்.மௌலவிக்கென்று வாக்கேதும் இல்லாததால் அவருக்கேன் மக்களிடம் செல்லப் பயம்? இப்போது மக்களைச் சேர்க்க முடியாது போனாலும் விளம்பரத்தைத் தேடிக்கொண்டு பின்பு வாக்கு வேட்டைக்கு களமிறங்க மௌலவி முயல்கிறார் என்றே கூற வேண்டும்.

எதுவித முக்கிய பாத்திரமில்லாமல் எதிர்க் கூட்டிற்கு ஆதரவளிப்பதை விட ஏதாவது ஐந்து பத்தை அரசிடம் பேரம் பேசி அதனைக் மக்களுக்கு கொடுப்பதே தனது எதிர் கால அரசியல் பயணத்திற்கு உகப்பானதாகும்.இந்த மௌலவிக்கு தனக்கெதிராக பின்னூட்டங்களை இடுபவர்களை முக நூலை விட்டும் நீக்கும் பழக்கம் உண்டு.அப்படியானால் இனி ஜனாதிபதி மகிந்த ராஜ பக்சவை ஆதரித்து கருத்து வெளியிட்டால் மக்கள் இடும் பின்னூட்டங்கள் யாவருக்கும் தெரியும்.இனி என்ன? ஓரிருவரோடு மௌலவி முக நூலில் உலா வாரப் போகிறார்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை

இலங்கை.

Related Post