Breaking
Fri. Nov 22nd, 2024

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் கடந்த 18ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சிறையில் மின் கம்பியை வாயால் கடித்து அவர் தற்கொலை கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக ராம்குமாரின் உறவினர்கள் முறைப்படு செய்துள்ளனர்.

பிரேத பரிசோதனை முடிவில் ராம்குமாரின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், பிரேத பரிசோதனை நடப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது.

சிறையில் சுவரினுள் பதிக்கப்பட்ட மின் வயரை கடித்து ராம்குமார் எப்படி இறந்திருப்பார் என்ற சந்தேகம் முன்வைக்கப்படும் நிலையில், சிறையில் ராம்குமார் மின் வயரை கடித்த இடத்தை குறிப்பிடும் வகையில், ஸ்விட்ச் பாக்ஸ் படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ஸ்விட்ச் பாக்ஸ் வயரை கடித்து தான் ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த ஸ்விட்ச் பாக்ஸ் டைல்ஸ் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்விட்ச் பாக்ஸை வாயால் கடித்து உடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அவ்வாறு உடைக்க முயன்றிருந்தால், ராம்குமாரின் வாயிலும் காயங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் ராம்குமாரின் வாயில் காயங்கள் இல்லை. அதேபோல் மின்சாரம் உடலில் பாய்ந்தாலும் அவர் தூக்கி வீசப்பட்டிருப்பார்.

அப்படி தூக்கி வீசப்பட்டிருந்தாலும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கும். அதற்கான காயங்களும் ராம்குமாரின் உடலில் இல்லை. எனவே இந்த ஒயரை வாயில் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

இதில் எது உண்மை என்பதற்கு பிரேத பரிசோதனையில் தான் விடை கிடைக்கும். இந்த புகைப்படம் வெளியானது தொடர்பாக சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் வினவினோம்.

குறித்த புகைப்படம் எப்படி வெளியானது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். ராம்குமார் தற்கொலை செய்தது உண்மை. இதில் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை என கருத்து வெளியிட்டுள்ளனர்.

By

Related Post