நேற்று நள்ளிரவு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வெல்லம்பிட்டிய கொஹிலவத்தை இப்ராஹிமிய்யா ஜும்மா பள்ளிக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (16.05.2017) நண்பகளலவில் விஐயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார்.
நடந்த விடயங்களை கேட்டறிந்துகொண்ட அவர் வெல்லம்பிட்டய பொலிஸ் பொறுப்பு அதிகாரியைச் சந்தித்து நிலைமைகளை விசாரித்ததுடன் பாதுகாப்பு தொடர்பில் தீவீர கவனம் செலுத்துமாறு வேண்டினார்.
புனித றமழான் நெருங்கும் போது இனவாதிகள் இவ்வாறான குழப்பத்தை உருவாக்கி சமூகங்களுக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயற்பட்டதை கடந்தகால வரலாறு. அந்த பின்னணியிலேயே வெல்லம்பிட்டி பள்ளிவாசல் தாக்குதலையும் கருதவேண்டும்.
இனவாதிகள் முஸ்லிம்களை நிம்மதியிழக்க செய்து அதில் இன்பம் காண விழைகின்றனர் என்று குறிப்பிட்ட அமைச்சர் அரசாங்கம் இந்த விடயங்களில் பாராமுகமாக இருந்தால் நிலைமைகள் விபரிதமாக்கி நாட்டின் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்றார்.
இதில் சம்பந்தப்பட்ட நாசகாரிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதற்கு பொலிஸார் தீவிரமாக செயற்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார்.