Breaking
Mon. Dec 23rd, 2024

இஸ்ஸதீன் றிழ்வான்

இன்வாத பெளத்த பிக்குகளால் பரிதாவமாக திட்டமிட்டுக் கொல்லப்படும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பற்றி மனித உரிமைகள் அமைப்புக்கள் இதுவரை சரியான கண்டனம் ஒன்றையும் வெளிடாத நிலையில் நாம் அமைதிகாப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

மியன்மாரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது . ஆனால் குடியுரிமையை மறுக்கும் இராணுவச் சரவதிகாரம் 1824 இல் ஊடுருவிய பிர்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் வருகையுடனே இஸ்லாம் பாரவியதாகச் சொல்லுகின்றார்கள் . மியன்மாரில் 4 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக சில இணையங்கள் கூறுகின்றது .

அங்கு பிரதான மூன்று முஸ்லிம் பிரிவினர்கள் இருக்கின்றார்கள் .
01) பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக் குடிகள் )
02) பஷுஷ் ( சீனா , தாய்லாந்து பூர்வீகத்தினர் )
03) ரோஹிங்கியா ( இந்தியா , பங்களா தேஷ் பூர்வீகத்தினர் )
இதில் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்கள் அல்ல என்று 1956 அரசாங்கம் மறுத்தது . இதனால் 1978 இல் இராணுவ அரசாங்கம் அக்யாத் நகரில் பாரிய இன அழிப்பு நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தது . இதன் விளைவாக நாடு பூர்வமாகவும் முஸ்லீம்களுக்கெதிரான இனவாதச் செயல்கள் ஆரம்பித்தது . 1990 களில் முஸ்லிம்மீதான தாக்குதல்களை தீவிரமடைந்தது இதனால் 268.000 பேர் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்தனர் .அதேபோல் 1996 இல் மட்டும் 56 பள்ளிவாசல்கள் இடித்துத் தரமட்டமாகக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுகூட ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலை படுமோசமாக உள்ளது .

இன்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதால் உண்ணுவதற்கு உணவில்லை, உடுப்பதற்கு உடையில்லை, வாழ்வதற்கு நாடில்லாமல் சிறு பிள்ளைகள், கற்பணிப் பொண்கள் வயோதிபர்கள், கடலில் தத்தழித்துக் கொண்டு உயிரைவிடுகின்றார்கள். இதுதான் ரோஹிங்கியா முஸ்லிம்களின் சோக நிலை.

இந்த நிலையை கண்டித்து சர்வதேச ரீதியாக நாம் நமது எதிர்ப்பை தெரிவிக்க முன்வருமாறு அழைப்புவிடுக்கிறேன் அன்பாய்.

Related Post