21.11.2016
இலங்கை முஸ்லீம்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடிக் குரல் கொடுத்து வரும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது கற்பனைக்கே எட்டாத வீண் பழிகளைச் சுமத்தி, பேரினவாதிகளால் தீவிரவாதி எனப் பெயரிடப்பட்டு நாட்டில் இனக்கலவரம் ஒன்றைத் தூண்டுவதற்கு சதிகாரர்களின் வெளிப்பாடாக வெளிவந்துள்ள கையடக்கத் தொலைபேசியில் வட்ஸ்அப் இல் பதிவேற்றப்பட்டுள்ள பதிவையும் அதன் தமிழாக்கத்தையும் கீழே தருகின்றேம்.
இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு இணையத்தளத்தில் வெளிவந்த அபாண்டமான செய்தியில் கண்டியில் 19 ஆம் திகதி நடைபெறும் பொதுபல சேனாவின் ஊர்வலத்தில் 5000 பேரையாவது கலந்து கொள்ளச்செய்ய முடியுமானால் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகிய நான் பதவி விளகி; கொள்வேன் என்று சவால் விட்டதாகக் கூறி, உசுப்பேற்றி அதன்மூலம்தான் அவர்கள் அவர்களின் ஊர்வலத்திற்கு ஆட்களை திரட்;டியுள்ளனர்.
இத்தகைய திரித்துரைக்கப்பட்ட நஞ்சைக் கக்கும் ஆபத்தான பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதன் மூலம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உயிருக்கு உலை வைக்க முயற்சியா? என்ற சந்தேகம் எழுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லீம்களை அமைதி பேணி பொறுமை காத்து நாட்டின் சமாதானத்துக்காகப் பிரார்த்திக்கும் படியும் இது சம்பந்தமாக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் அவர்கள் தெரிவித்தார்.