Breaking
Tue. Dec 24th, 2024

இவற்றை உலமா சபை கவ­னத்­திற்­கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

பொது­ப­ல­சேனா அமைப்பு குர்ஆன் அத்­தி­யா­யங்கள் சில­வற்றைக் குறிப்­பிட்டு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யிடம் அவற்­றுக்­கான விளக்­கங்­களைக் கோரி­யி­ருப்­பது தொடர்பில் கருத்து வின­விய போதே அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் விடி­வெள்­ளிக்கு இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துதெரி­விக்­கையில்;
நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது. ஆனால் ஒரே ஒரு விட­யத்தில் மாத்­தி­ரமே கடந்த கால அர­சாங்­கத்தின் கொள்­கையைப் பின்­பற்­று­கி­றது.

அது பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் விவ­கா­ரத்­திலும் மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ராம விகாரை அதி­ப­தியின் விவ­கா­ரத்­தி­லாகும். இன­வா­தத்தைத் தூண்ட முயற்­சிக்கும் இவர்­களை அர­சாங்கம் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

முஸ்­லிம்­களை எதி­ரி­க­ளாக எண்­ணி­யி­ருக்கும் ஞான­சார தேரர் குர்ஆன் விளக்­கங்­களை அறிந்து கொள்­வ­தற்குத் தேவை­யில்லை. உலமா சபை தெளி­வான விளக்­கங்­களை வழங்­கி­னாலும் ஞான­சார தேரர் அதனை ஏற்­றுக்­கொள்­ள­மாட்டார். அதில் மாற்­றங்­களைச் செய்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல போராட்­டங்­களை முன்­னெ­டுப்பார்.

பொது­பல சேனாவின் செய­லாளர் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட ஒருவர். அவர் காவி­யுடை அணிந்­தி­ருப்­ப­தி­னாலே மக்கள் அவரை மதிக்­கின்­றனர். இல்­லையேல் அவர் பல சவால்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருப்பார். மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட அவ­ரது கடிதம் தொடர்பில் உலமா சபை அலட்டிக் கொள்ளத் தேவை­யில்லை.

சிறைக்குள் இருக்க வேண்­டி­ய­வர்கள் சுதந்­தி­ர­மாக நட­மாட விடப்­பட்­டி­ருப்­ப­த­னா­லேயே இன்று இனவாதம் தலையோங்கியுள்ளது.
குர்ஆனுக்கு விளக்கம் கோரியிருப்பது வேறோர் இனவாத முயற்சிக்கான ஏற்பாடாகும். எனவே உலமா சபையும் முஸ்லிம் சமூகமும் இச்சந்தர்ப்பத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் என்றார்.

By

Related Post