Breaking
Sun. Dec 22nd, 2024

-Irshad Rahumadullah

இந்த நாட்டில் இனவாத சக்திகளை தோற்கடிகத்து சகலரும் விரும்பும் சமாதான சூழலை ஏற்படுத்தும் கூட்டு முண்ணனியுடன் பயணிக்கும் அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்பதே எமது இலக்காகும் என ஜக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முண்ணணயின் பொதுச்செயலாளரும்,அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மன்னார் ஓலைத்தொடுவாவில் இடம் பெற்ற திறப்பு விழாவொன்றில் சனக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மெற்கண்டவாறு கூறினார்.

இன்று இனவாதிகள் அதிகாரப் பகிர்வை எதிர்க்கின்றனர்.  எமது ஜனாதிபதி இந்த நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களும் கௌரவமாக வாழுவதை உறுதிப்படுத்தும் வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றார். அதற்கு எல்லோரும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

கடந்த கால இனவாத செயற்பாடுகள் உச்சத்தில் இருந்ததாலேயே மாற்றத்தினை மக்கள் ஏற்படுத்தினர். இன்று அந்த சக்திகள் பிளவுகளை தோற்றுவிக்க முயற்சிக்கின்றது. அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஓரு போதும் ஜனாதிபதியும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் இடம் கொடுக்காது.

குறிப்பாக அரசாங்கத்தில் அங்கத்துவம் கொண்டுள்ள பொதுஜன ஜக்கிய முன்னணியின் செயலாளர் என்ற வகையில் இந்த இனவாதததுக்கு எதிராக செயற்படும் துணிவினை நாம் கொண்டுள்ளோம். அதனை தோற்கடித்து அனைத்து சமூகங்களின் எதிர்பார்ப்பினையும் அடைந்து கொள்ளும் பாதையில் செல்ல நாம் தயாராக இருக்கின்றோம் எனறும் அமைச்சரும்செயலாளருமான மஹிந்த அமரவீர கூறினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான்,சார்ள்ஸ் நிமலன்,மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் உட்பட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.

By

Related Post