அரசாங்கம் தனது தோல்வியை தவிர்த்துக் கொள்ள இனவாதம் மற்றும் மதவாதத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத்தேர்தல் மூலம் அரசாங்கத்தின் தோல்வி ஆரம்பமாகி விட்டது. எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணி மூலம் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை தடுக்கவும், அரசாங்கத்தின் தோல்வியைத் தடுத்துக் கொள்ளவும் இனவாதம், மதவாதம் என்பவற்றை அரசாங்கம் கையில் எடுத்துக் கொண்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியை விடுதலைப் புலிகளின் ஆதரவு சக்தியாக சித்தரிக்க முயன்று வருகின்றது. எனினும் இது போன்ற பிரச்சாரங்களால் எமது கட்சியின் வெற்றியை அரசாங்கத்தினால் இனி தடுத்து நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.