Breaking
Mon. Dec 23rd, 2024

வில்பத்து வனத்துக்கு உற்பட்ட பிரதேசத்துக்குள் முஸ்லிம்களை அமைச்சர் ரிஷாத் மீள் குடியேற்றம் செய்துள்ளதாக சில கடும்போக்கு அமைப்புகளும் சில சிங்கள ஊடகங்களும் கதை பரப்பி வரும் நிலையில் மடவளை நியூஸ் செய்தி குழு மன்னார் மரிச்சிக்கட்டி பிரதேசத்துக்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டோம்.

அதன் போது நேற்றைய தினம்  மரிச்சிக்கட்டி ஜாசிம் மாகா வித்தியாலத்தில் அவ்ஊர்மக்களுக்கான விஷேட கூட்டம் ஒன்று ஜும்மாவின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

அதன் போது இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் செய்த ஊடகவியலாளர்கள் குழுவினருக்கு ஒத்துழைப்பு  நல்குவது தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் ஆலோசனை செய்யப்பட்டது.

குறித்த கூட்டத்தில் விஷேட அம்சமாக  லக்சல நிறுவனத்தின் பணிப்பாளரும் வர்தகருமான மரிச்சிகட்டியை பிறப்பிடமாக கொண்டவரும் கண்டியில் வசிப்பவருமான இஸ்ஸதீன் ரியாசினால் வரும் தினங்களில் ஜனாதிபதி மைத்ரிக்கு மகஜர் ஒன்றை கையளிக்க யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.

குறித்த மகஜருடன் பின்வரும் ஆவணங்களை உள்ளடக்கவும் அவர் முன்மொழிந்தார்….

1.மரிச்சுக்கடி என்ற ஊர் நூற்றாண்டு காலமாக இருந்ததற்கான சகல சான்றுகளையும் ஆவணங்களையும் மகஜருடன் இணைத்தல்(அங்கு பிறந்தவர்களின் பிறப்பு,இறப்பு,திருமண சான்றிதழ்கள் மற்றும் காணிபத்திரங்கள்,அடையாள உள்ளிட்ட ஆவணங்கள்)

2.1990ல் முஸ்லிம்கள் விடுதலை புலிகளினால் மரிச்ச்சுக்கட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது தொடர்பான சான்றுகளையும் புத்தளத்தில் முகாம்களில் அவர்கள் அகதிகளாக குடியேற்றப்பட்ட சான்றுகளையும் குறித்த மகஜருடன் இணைத்தல்.

3.யுத்தம் முடிவுற்ற பின்னர் அப்பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஊடாக மீள் குடியேற வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் ஆவணங்களையும் இணைத்தல்.

மேல் குறிப்பிட்ட சான்றுகள் மற்றும் ஆவணக்களுடன் ஜனாதிபதிக்கு வழங்கும் மகஜரில் மேற்குறித்த ஆவணங்களை அடிப்படையாக கொண்டு தற்போது முஸ்லிம்கள் மீள குடியேற்றப்பட்டுள்ள மரிச்சுக்கட்டி பிரதேசத்தை அது மரிச்சுக்கட்டி பிரதேசம் என்பதினை அடையாளப்படுத்தி தருமாறு வேண்டுகோள் விடுத்தல் .

இல்லை … கடும்போக்கு அமைப்புகளும் சிங்கள ஊடகங்களும் கதைபரப்புவது போல் வில்பத்து வனத்துக்கு சொந்தமான பிரதேசத்தில் முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டிருந்தாக இருந்தால் அரசு கருதுவதாக பல தலைமுறைகளாக முஸ்லிம்கள் வாழ்ந்த மரிச்சுக்கட்டி பிரதேசத்தை இலங்கை வரைபடத்தில் கண்டுபிடித்து அம்மக்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு வேண்டுகோள் ஒன்றை குறித்த மகஜர் மூலம் முன்வைக்க யோசனை முன்வைக்கப்பட்டு இந்த யோசனைகளை சபையோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குறித்த மகஜர் கையளிக்கப்ப்படுமிடத்து தற்போது முஸ்லிம்களை மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது மரிச்சுக்கட்டி கிராமத்தில்தான் என்பதை அடையாளப்படுத்தியோ அல்லது இனவாதிகள் சொல்வது போல் வில்பத்து வனத்தில் முஸ்லிம்கள் அமைச்சர் ரிஷாத்தினால் குடியேற்றப்பட்டிருந்தால் பல தலைமுறைகளாக முஸ்லிம்கள் வாழ்ந்த மரிச்சுக்கட்டி பிரதேசத்தை இலங்கை வரைபடத்தில் கண்டுபிடித்து அம்மக்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பாரா ஒட்டு மொத்த முஸ்லிம்களும் வாக்களித்த எமது ஜனாதிபதி ???

Related Post