Breaking
Sat. Dec 28th, 2024

இன­வாத சக்­தி­களின் செயற்­பா­டுகள் மீண்டும் நாட்­டுக்குள் கொழுந்து விட ஆரம்­பித்­துள்­ளன. இன­வா­தத்­திற்கும் இன­வா­தி­களுக்கும் இட­ம­ளித்தால் பாரிய பிள­வு­க­ளுக்கே வழி­வ­குக்கும். இப்­ப­டி­யா­ன­தொரு தரு­ணத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் செயற்­பா­டுகள் தொடர்­பி லும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கவனம் செலுத்த வேண்டும் என மத்­திய மாகாண சபை உறுப்­பினர் அஸாத் சாலி தெரிவித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி உட்­பட அர­சியல் அந்­தஸ்தை இழந்து நாட்டில் மீண்டும் பிரி­வி­னை­வா­தத்தை ஏற்­ப­டுத்தத் துடிக்கும் சக்­தி­க­ளுக்கு இனி ஒரு போதும் இட­ம­ளிக்க கூடாது. அவ்­வாறு இட­ம­ளிக்கும் பட்­சத்தில் நாட்டில் அனைத்து கட்­சிகள் உட்­பட மூவின மக்கள் இடையே பாரிய பிள­வு­க­ளுக்கே வழி­வ­குக்கும் எனவும் குறிப்பிட்டார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்­கியப் படுத்தும் இயக்­கத்­தினால் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே மத்­திய மாகாண சபை உறுப்­பி­னரும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான அஸாத் சாலி மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் ;

இன­வாத சக்­தி­களின் செயற்­பா­டுகள் மீண்டும் நாட்­டுக்குள் கொழுந்து விட ஆரம்­பித்­துள்­ளன. இன­வா­தத்­திற்கும் இன­வா­தி­களுக்கும் இட­ம­ளித்தால் பாரிய பிள­வு­க­ளுக்கே வழி­வ­குக்கும் இப்­ப­டி­யா­ன­தொரு தரு­ணத்தில் முன்னாள் ஜனா­தி­பதி உட்­பட அர­சியல் அந்­தஸ்தை இழந்து நாட்டில் மீண்டும் பிரி­வி­னை­வா­தத்தை ஏற்­ப­டுத்தத் துடிக்கும் சக்­தி­களின் செயற்­பா­டுகள் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த ஜனா­தி­பதி தேர்தலின் போது நாட்டில் நல்­லாட்சி ஒன்றை ஏற்­ப­டுத்தி முன்­னைய அரசின் சர்­வ­ாதி­கார ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைக்க எம்மை போன்ற சிறு­பான்மை கட்­சிகள் சில பாரிய அர்ப்­ப­ணிப்பை மேற்­கொண்­டன. ஆனால் இன்­றைய நிலையில் நல்­லாட்­சியின் செயற்­பா­டு­களில் இவை அனைத்தும் ஓரங்­கட்­டப்­பட்­டுள்­ள­தோடு கடந்த காலங்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ராக செயற்­பட்ட கட்­சி­களும் அதன் உறுப்­பி­னர்­களும் இன்று புதிய அர­சுடன் சேர்த்துக் கொள்­ளப்­பட்­டுள்­ளனர்.

19 ஆவது திருத்­தச்­சட்டம்

புதிய அர­சா­னது தனது 100 நாள் வேலைத் திட்­டத்தின் அடிப்­ப­டையில் நாட்டில் ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்­து­வது தொடர்பில் 19 ஆவது திருத்­தத்தை ஏற்­ப­டுத்தி தேர்தல் முறையை மாற்­று­வது தொடர்பில் தீர்­மா­னித்­துள்ள நிலையில் இது­வரை 19 ஆவது திருத்­தச்­சட்டம் தொடர்பில் சிறு­பான்மை கட்­சி­க­ளுடன் எந்த வித கலந்­து­ரையா­டல்­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. இந்த திருத்­தத்தில் எவ்­வா­றான விட­யங்கள் உள்­ள­டக்­க­ப்பட்­டுள்­ளன என்பது தொடர்­பிலும் எமக்கு எவ்­வித தக­வல்­களும் தெரியாது.

எதிர்க்­கட்சி தலைவர்

நாட்டில் தேசிய அர­சா­னது உரு­வாக்­கப்­பட்ட பின்னர் எதிர்க்­கட்சி தலை­வரை நிய­மிப்­பது தொடர்பில் பாரிய கருத்து வேறு­பா­டுகள் எழுந்த வண்ணம் உள்­
ளன. இத­னி­டையே மீண்டும் பிரி­வி­னை­வாதத்தை ஏற்­ப­டுத்த செயற்­படும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, உதயகம்ம ன்பில போன்றோர் எதிர்க்கட்சி தலைவர் விவகாரத்தை வைத்துக் கொண்டு இனங்களுக்கிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.எனவே பிரிவினைவாதிகளுக்கு இடமளிக் காது இது தொடர்பில் பாராளுமன்ற சட்ட திட்டங்களுக்கமைய உரிய தீர்வு அவசியம். என தெரிவித்தார்.

Related Post