நாடு பிளவு படக்கூடாது என்பதற்காகவே வடமாகாண முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடவில்லை ஆனால் இன்று யுத்தம் நிறைவுக்கு வந்து ஓரளவு சமாதானக் காற்றை சுவாசிக்கலாம் என்ற வேளையில் சமயத்தைப் பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் இனவாதம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மிக மோசமாக திசை திருப்பப்பட்டு வருகின்றமை வேதனை அளிக்கின்றது. பொதுபல சேனா உள்ளிட்ட சில இனவாதக் குழுக்களின் செயற்படுகளே இதற்கு முக்கிய காரணங்களாகும்.
இவர்களால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற் கொள்ளப்படுகின்ற எல்லாவற்றையும் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டி அவற்றை தடை செய்ய நாம் எம்மாலான முழு முயற்சிகளையும் எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இந்த வகையில் இந்த நாட்டின் ஜனாதிபதியை நம்பியிருக்கின்றோம் காரணம் இந்த அரசாங்கம் உறுதியானதுடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருப்பதால் அரசுடன் இருந்துதான் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என்றார் அமைச்சர்.
அவர் மேலும் தனதுரையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்படவில்லை யுத்தத்தில் முஸ்லிம்கள் ஈடுபடாத போதிலும் இன்று இனவாதிகள் முஸ்லிம்கள் விடயத்தில் தேவையற்ற விதத்தில் மூக்கை நுழைக்கின்றனர் குறிப்பாக அபாய, ஹலால், வர்த்தகம் என ஒவ்வொரு விடயத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர்.
மேற்படிச் செயற்பாடுகளை நிறுத்தவும், அவை இடம்பெறாதிருப்பதுக்குமான நடவடிக்கைகளை ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டி முன்னின்று செயற்படுகின்றோம். தம்புள்ள பள்ளியில் தொடங்கி தெஹிவலை ஷாபி பள்ளிவரையும் தமது அடாவடித் தனங்களை செய்து வருகின்றனர்.
இவற்றை நோக்குமபோது சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை மாறாக பொலிஸாரும் மதஸ்தளங்கள் மீது தேவையற்ற தலையீடுடகளை மேற் கொண்டு வருகின்றனர். அவர்கள் தாம் நினைத்தமாதிரி நடந்து கொள்கின்றனர், கிறேண்டபாஸ் பள்ளி உடைப்பில் பொலிசார் பௌத்த தீவிரவாதிகள் பள்ளியை உடைக்கும் வரை பார்த்தக் கொண்டிருந்தனர் இதற்காகவே நான் பொலிஸ் மா அதிபரை பதவி விலகச் சொன்னேன் இது எமது சமுகத்தின் நலன் கருதியெ செய்தேன்.
இவ்வாறு நாம் கதைப்பதற்கு எமக்கு தகுந்த பிரதி நிதித்துவங்கள் இருக்குமானால் அதை நாம் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் அதற்காகவே நாம் முதன் முதலாக கொழும்பில் போட்டியிடுகின்றோம் அதன் மூலம் தேவையான பிரதி நிதித்தவங்களைப் பெற்று எமது சமுகத்திற்கு எதிரான தீய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு துனிரகமாக நின்று காட்டமாக குரல் கொடுக்கலாம் இந்த வகையில் முஸ்லிம்கள் நாட்டுப்பற்றுடன் செயற்படவேண்டும்.
கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வி மிகவும் பின்னடைவில் உள்ளது கொழும்பில் பல வசதிகள் இருந்தம் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவது மிகவும் குறைவானது இதனை எதிர் காலத்தில் முன்னேற்ற வேண்டும் அது தொடர்பாக நாம் சில விடயங்களை இனங்கண்டுள்ள போதிலும் உங்களுடன் இன்னும் பலவிடயங்களை கலந்துரையாடி கல்வியை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் அதற்காக நாம் தேர்தலுக்குப் பின்னர் வேலைத்திட்டங்களை மேற் கொள்ளவுள்ளோம் அதற்காக உங்களின் பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது.
வடகிழக்கு மாகாணங்களையும் ஏனைய ஒருசில மாவட்டங்களையும் எடுத்துக் கொண்டால் அவர்கள் பல்கலைக் கழகம் செல்லும் தொகை அதிகமாகவுள்ளது கிழக்கில் ஒரு பாடசாலையில் 50 மாணவர்கள் வரை ஒரு வருடத்தில் பல்கலைக்கழகம் செல்கின்றனர், பல மாவட்டங்கள் பரிதாபகரமான நிலையில் உள்ளது. இந்த வகையில் கொழும்பு மாவட்ட மாணவர்களையும் அதிகமாக பல்கலைக் கழகம் அனுப்பி கல்வியில் முன்னேற்றம் காணவும் அவர்களை கல்விமான்களாக ஆக்கவும் நாம் முயற்சிகளை மேற் கொள்ளவேண்டும்.
இன்று முஸ்லிம்களிடத்தில் கொள்கைகள், சிறந்த திட்டங்கள் இல்லாது பல கட்சிகளில் போட்டியிடுகின்றனர் இவ்வாறு செயற்படுவதால் 20 இலட்சம் முஸ்லிம்களின் நிலை என்ன? ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிடம் சிறந்த கொள்கைகளும் திட்டங்களும் இருப்பின் நாம் அவர்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராகவுள்ளோம்.
இவ்வாறு பல கட்சிகளாக பிரிந்த ஒன்றையும் சாதித்துவிட முடியாது ஏனெனில் மஹிந்தவின் அரசு நல்ல பலத்துடன் உள்ளது இம்முறையும் அவர்களே வெற்றி பெறுவார்கள் எனவே அரசுடன் இணைந்த செயற்படுவதன் மூலமே நாம் எமது மக்களின் பிரச்சினைகளை பேச முடியும், அந்தவகையில்தான் நாம் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் பலவிடயங்களை ஆராய்ந்து தேவையானவற்றை ஆவணப்படுத்தி திட்டங்களை தீட்டி கொழும்பு முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்த வருகின்றோம்.
இதேபோல் நாம் இடம் பெயர்ந்தவர்கள் என்ற வகையில் வடமாகாணத்தில் இன்னும் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மீள் குடியேற வேண்டியுள்ளதுடன் அவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்ககின்றனர் அந்த வகையில் அவர்களின் பிரச்சினைகளையும் அமைச்சர் என்ற வகையில் தீர்;க்க வேண்டிய பொறுப்பம் எங்களுக்கு உள்ளது அவ்வாறான தொரு சூழலிலேயே கொழும்பு மக்களின் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு ஏனைய அரசியல் தலைமைகள் போல் இல்லாது அம்மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து செயற்படவே இன்று நாம் கொழும்மில் தேர்தலில் போட்டியிடுகின்றோம் அதன் மூலம் இம்மக்களிக் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
1988 இலிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்க மக்கள் வாக்களித்த வருகின்றனர் ஆனால் இதுவரை ஒரு வீட்டையாவது அவர்கள் முஸ்லிம் சமுகத்திற்கு கட்டிக் கொடுத்துள்ளார்களா? இல்லை ஆனால் நாங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு பல வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளோம் மன்னாரில் பூர்வீகமாக வாழ்ந்த மக்களின் காணிகளில் அவர்களை குடியமர்த்தி வரும் வெலையில் பொதுபல சேனா அமைச்சர் றிஷாட் காடுகளை அழிக்கின்றார் என்று குற்றஞ் சாட்டுகின்றனர் இவ்வாறு இனவாதிகள் இன்று முஸ்லிம்கள் விடயத்தில் அதிகமாக எதிர்ப்புக்களைக் காட்டுகின்றனர் எனவே இவர்களுக்கு தேர்தல் மூலம் தகுந்த பாடங்கiளைக் கற்பிக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமை என்றார் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.
கொழும்பு மாவட்டத்தில் பின்தங்கியிருக்கும் முஸ்லிம்களின் கல்வி தொடர்பாக நேற்று (22) தனது உத்தியோ பூர்வ இல்லத்தில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள சட்டத்தரணிகள், வைத்தியர்கள், பொறியிலாளர்கள், அதிபர்கள், அரச நிருவாக சேவை அதிகாரிகள், கல்விமான்கள், புத்தி ஜீவிகளுடனான சந்திப்பிலேயே அமைச்சர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாறுக், கிழக்குமாகாண சபை உறுப்பினர் அமீர் அலி, மற்றும் கட்சியின் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.