Breaking
Tue. Mar 18th, 2025
இனவாதத்தை தூண்டும் வகையிலான சுவரொட்களை அகற்றுவதற்கு பஸ் உரிமையாளர்களுக்கு ஒரு வாரக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேயரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த சுவரொட்டிகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்தநிலையில் சட்டப்படி பஸ் உரிமையாளர்கள், இவ்வாறான சுவரொட்டிகளை தமது பஸ்களில் ஒட்டுவதற்கு இடமளிக்கக்கூடாது என்று கெமுனு கோரியுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பொதுத்தேர்தலின் போதும் அரசியல் சுவரொட்டிகளை பஸ்களில் ஒட்டுவதற்கு இடமளிக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் தனியார் பஸ்களில் சகல இனத்தவரும் பயணம் செய்யும் போது அவர்களுக்கு இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய சுவரொட்டிகளுக்கு இடம்தர முடியாது என்றும் கெமுனு தெரிவித்துள்ளார்.

By

Related Post