ஹெல உறுமய உறுப்பினர்களுக்கு எதிராக இனி பல கோணங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப் படலாம். கொலைகாரர்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும்கூட குறிப்பிடலாம். ஆனால், நாம் ஒருபோதும் வளைந்து கொடுக்க மாட்டோம்.பிரபாகரனுக்கே அடி பணியாத நாம் இவ்வாறான அழுத்தங்களைக்கண்டு அஞ்சப்போவதில்லை .
சிங்கள மக்களுக்காக நாம்தான் குரல் எழுப்பிவரு கின்றோம். மாவிலாறு முதல் அளுத்கமவரை எமது குரல் ஓங்கி ஒலித்தது.
இன்று இந்த அரசிலுள்ள சிலர் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். அதிகாரிகள் சிலர் தான்தோன்றித்தனமாகச் செயற் படுகின்றனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை இல்லை.
எனவே, நாடாளுமன்றத்துக்கும், நீதிமன்றத்துக்கும் பொறுப்புகூறக் கூடிய வகையில் நிறைவேற்று ஜனா திபதி முறைமை திருத்தப்படவேண் டும். அத்துடன்,அமைச்சரவை எண் ணிக்கை 20‡25 இற்கும் இடைப் பட்டதாக இருக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட வேண்டும். அமைச் சுகளுக்கான செயலாளர்கள் தொழில் தகைமை அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும். பாதுகாப்பு அமைச்சும், புத்தசாசன அமைச்சும் ஜனாதிபதியிடம் இருந்தால் பரவாயில்லை.”
இப்படி தெரிவித்தார் ஜாதிக யஹல உறுமயவின் பொதுச்செயலாளர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க.