Breaking
Sun. Dec 22nd, 2024

இன்டர்நெட் சென்டரில் பிரசவித்த சீனப்பெண் குறித்து மிரர் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஷடோங் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சியான்சி மாகாணத்தின் தலைநகரான நன்சாங் நகரில் உள்ள இன்டர்நெட் சென்டருக்கு வந்துள்ளார். அங்கு பொழுதை போக்குவதற்காக கம்ப்யூட்டரில் வீடியோகேம் விளையாடத் தொடங்கிய அவர், சற்று நேரத்தில் பிரசவ வலி ஏற்படவே சத்தம் போட்டுள்ளார். (அப்போதுதான் அங்கிருந்தவர்கள் அவர் நிறைமாத கர்ப்பமாக இருப்பதைக் கண்டனர்.)

அங்குள்ள கழிவறைக்குச் சென்று சிரமப்பட்டு தனது குழந்தையை பிரசவித்த அவர், அங்கு இருந்தவர்கள் கொடுத்த தண்ணீரைக் கொண்டு தன்னையும் குழந்தையையும் சுத்தம் செய்தார். பின்னர் குழந்தையை ஓரமாக வைத்து விட்டு, மறுபடியும் வீடியோகேம் விளையாடச் சென்று விட்டார். இதனால் திகிலடைந்த இன்டர்நெட் சென்டர் வாசிகள் ஆம்புலன்சை வரவைத்துள்ளனர். அப்போதும் ஸ்ட்ரட்சரில் செல்லாமல் நடந்தே அந்தப் பெண் ஆம்புலன்சில் ஏறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

தற்போது தாயும் சேயும் மருத்துவமனையில் உள்ளனர்.

Related Post