Breaking
Tue. Dec 24th, 2024

நாட்டில் பரவிவரும் இன்ப்ளூவன்சா ஏ.எச்.1 என்.1 வைரஸினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.வைரஸ் தொற்று அதிகரிக்கும் நிலையில், நிமோனியா ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அமைச்சின் தொற்றுநோய், ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன கூறினார்.

இந்த வைரஸ் தொற்று ஏற்படுமிடத்து, தடிமன், காய்ச்சல், தொண்டை வலி மற்றும் தலைவலி போன்ற நோய் அறிகுறிகள் காணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.கொழும்பு, பதுளை, கேகாலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் இன்ப்ளூவன்சா ஏ.எச்.1 என்.1 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் காய்ச்சல் காணப்படுமிடத்து, தாமதமின்றி சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென டொக்டர் பபா பலிஹவடன கோரியுள்ளார்.

Related Post