Breaking
Wed. Nov 13th, 2024

சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு நகரத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை காலி வீதியில், காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான பகுதி மற்றும் சைத்திய வீதியிலும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 வரை கொள்ளுப்பிட்டி முச்சந்தி முதல் காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரை செல்வதற்கு பயணிகள் பஸ் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி புனித மைக்கல் சுற்றுவட்டமூடாக காலி வீதிக்கும், மற்றும் ரொடுன்சா சுற்றுவட்டம் ஊடாக காலி வீதிக்கும் செல்ல அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

செரமிக் சந்தி ஊடாக லோட்டஸ் வீதி, பழைய பாராளுமன்ற பகுதிகளில் பயணிப்பதற்கு அலுவலக வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விசேட போக்குவரத்து ஒழுங்குகளின் பிரகாரம் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை யோக் வீதியூடாக வங்கி வீதி பகுதிக்கு செல்வதற்கு அலுவலக வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இன்று காலை 8.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஜனாதிபதி மாவத்தை – வங்கி வீதி சந்தி முதல் பழைய பாராளுமன்ற சந்தி வரை பயணிப்பதற்கு அலுவலக வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பிலிருந்து வெளியேறும் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் ஒல்கோட் மாவத்தை, டெக்னிக்கல் சந்தி, மருதானை பாலம், டி.பி ஜயா மாவத்தை, இம்பன்வல சந்தி, யூனியன் பகுதி, லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை. எப்.ஆர்.சேனாநாயக்க மாவத்தை, கன்னங்கர மாவத்தை, நந்தா ​மோட்டார் சந்தி, சுந்திரசதுக்க சுற்று வட்டம் , ரீட் மாவத்தை தும்முல்லை சந்தி , பௌத்தாலோக மாவத்தை, ஆர் ஏ.டி.மெல் மாவத்தை ஆகிய வீதிகளூடாக காலி வீதியை சென்றடைய முடியும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

By

Related Post