Breaking
Thu. Nov 28th, 2024

இலவச wi-fi சேவை கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 26 பொது இடங்களில் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி தேர்தலின்போது அளித்த வாக்குறுதிக்கு இணங்கவே இந்த wi-fi சேவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.   இதேவேளை, ஒகஸ்ட் நிறைவுக்குள் 1,000 பொது இடங்களில் இச்சேவையை பெற்றுக்கொள்ள முடியுமென தகவல் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது.

தற்போது ஆரம்பித்து வைக்கபட்டுள்ள இலவச சேவை 512 Kb வேகத்திலே செயல்படும் எனவும் தெரிவிக்க்கபட்டுள்ள நிலையில் மின்னஞ்சல், வாட்ஸ் அப் , விக்கிபிடியா, கூகுள் தேடல், சமூகவலைகள்  போன்ற இணைய தேவைகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கபடுகிறது. (மொத்தம் 100Mb பாவனை அளவு)

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த wi-fi சேவை தொடர்பான நேரடி ஒளிபரப்பு, யாழ்ப்பாணம், பொலன்னறுவை மற்றும் மாத்தறை ரயில் நிலையங்களிலும் பஸ் நிலையங்களிலும் பாரிய திரைகளினூடாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையம், புறக்கோட்டை பொது மற்றும் தனியார் பஸ் நிலையங்கள், கண்டி தலதா மாளிகை, கோட்டை மிதக்கும் சந்தை, கொழும்பு சட்டக்கல்லூரி, கொழும்பு பொது நூலகம், தெஹிவளை மிருகக்காட்சிச் சாலை, கொழும்பு குதிரைப் பந்தயத் திடல், பொலிஸ் தலைமையகம், காலி, யாழ்ப்பாணம் ரயில் நிலையங்கள், கோட்டை டச் வைத்தியசாலை, காலிமுகத்திடல், பத்தரமுல்லையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்,கொழும்பு அருங்காட்சியகம், கராப்பிட்டிய வைத்தியசாலை, இரத்தினபுரி அருங்காட்சியகம், பொலன்னறுவை ஆதார வைத்தியசாலை, மாத்தறை பஸ் நிலையம், பொலன்னறுவை பஸ் நிலையம், மிரிஜ்ஜாவில தாவரவியல் பூங்கா, யாழ்ப்பாணம் பொது நூலகம், கண்டி மற்றும் பேராதனை ரயில் நிலையம் ஆகியவற்றில் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post