இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்திற்கு தலைமைதாங்கவுள்ளார்.
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் இன்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளைää இன்று பிற்பகல் நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாம் வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.