Breaking
Fri. Jan 17th, 2025

சந்திரகிரகணம் இன்று பிற்பகல் 1.46க்கு ஆரம்பித்து இரவு 7.04க்கு முடிவடையவுள்ளது.

எனினும் இலங்கையில் உள்ளோர் இந்த கிரகணத்தின் இறுதிப் பகுதியை மாலை 6 மணிமுதல் 6.03 மணி வரையிலான காலப்பகுதியில் மாத்திரமே பார்க்கமுடியும்.

எனினும் முழுமையான சந்திரகிரகணத்தை வடஅமெரிக்கா, கனடா, நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய மக்களால் பார்க்க முடியும்.

இதேவேளை எதிர்வரும் 24ஆம் திகதியன்று சூரியகிரகணம் பிற்பகல் 1.08 இலங்கை நேரப்படி தென்படத்தொடங்கும்.

எனினும் இந்த சூரியக்கிரகணம் இலங்கைக்கு தென்படாது. கனடா மற்றும் அமரிக்காவுக்கே இது முழுமையாக தென்படும்.

இதற்கிடையில் 2016 ஆம் ஆண்டு மார்ச் 9 மற்றும் ஏப்ரல் 4ஆம் திகதி தோன்றும் சூரியக்கிரகணத்தை இலங்கையர்களால் பார்க்கமுடியும்.

Related Post