உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வருடாந்தம் மே மாதம் 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. புகைத்தல் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக வருடாந்தம் காலத்திற்கேற்ப ஒவ்வொரு தொனிப் பொருளை முன்வைத்து மக்களை விழிப்புணர்வூட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் இம்முறைக்கான தொனிப்பொருளாக ‘ உருவமற்ற சிகரெட் பெட்டிகளை அமுல்படுத்தல் அமைந்துள்ளது.’ ( எந்தவிதமான விளம்பரங்களுமில்லாத மங்கலான நிறத்தில் அமைக்கப்பட்ட சிகரெட் பெட்டி.) அவுஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.