– எம்.ஆர்.எம்.வஸீம் –
துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை மஹ்ரிப்தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடுகின்றது.
இம்மாநாட்டில் அகிலஇலங்கை ஜம் இய்யதுல் உலமா,கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்,முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப் பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பி னர்கள் மற்றும் உலமாக்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாட்டின் எப்பாகத்திலாவது தலைப் பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன்
0714817380, 011 2432110 fax 011 2390783 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அகிலஇலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு செயலாளர் மௌலவி அஸீஸ் தெரிவித்தார்.