Breaking
Mon. Dec 23rd, 2024

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மின்னுற்பத்தி நடவடிக்கைகள் இன்று (16) மாலை மீண்டும் ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறினார். இவ்வாறு நுரைச்சோலை அனல் மின்நிலையம் மீண்டும் இன்று இயங்கத் தொடங்குமாயின், இன்றைய தினம் மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மின்சாரத் தடை தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஆலோசனைகளுக்கு அமைய, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் இப்பிரச்சினைகளைச் சமாளிக்கக்கூடிய முன்கூட்டிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் கையாளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

By

Related Post