Breaking
Mon. Dec 23rd, 2024

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளினால் உண்டான பாதிப்புக்களை தொடர்ந்தும் முகாமை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, ஜனாதிபதியின் செயலணி இன்று முதன்முதலாக கூடவுள்ளது.

இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய அண்மையில் இந்த செயலணி உருவாக்கப்பட்டது.

சேதமடைந்துள்ள வீடுகள், தொழில்துறை மற்றும் வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்புதல், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல் மற்றும் சுகாதார வசதியை மேம்படுத்தல் போன்றன இந்த செயலணியால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளாகும்.

இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை அதிகரிக்க வௌிநாடுகள் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது வரை இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதிகளவு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post