-Razana Manaf-
புதிய அரசின் தேர்தல் வாக்குறுதியின் ஒரு அம்சமான இலவச வை பை இன்டர்நெட் சேவை இன்று முதல் நாட்டில் முக்கிய இடங்களில் அறிமுகப்ப்டுத்தபட உள்ளது.
1. கோட்டை புகையிரத நிலையம்
2. கோட்டை பஸ் நிலையம் (தனியார், அரச)
3. கண்டி தலதா மாளிகை
4. புறக்கோட்டை மிதக்கும் சந்தை
5. கொழும்பு சட்டக்கல்லூரி
6. கொழும்பு பொது நூலகம்
7. லிபர்டி பிளாசா
8. கொழும்பு ரேஸ்கோர்ஸ்
9. போலிஸ் தலைமையகம்
10. காலி புகையிரத நிலையம்
11.யாழ்ப்பாண புகையிரத நிலையம்
12. கோட்டை டச்
13. ஹொஸ்பிடல்
14. காலி முகத்திடல்
15. பத்தரமுல்ல வெளிநாட்டு வேலை வாய்ப்பு மையம்
16. கொழும்பு நூதன சாலை
17. கராப்பிட்டிய வைத்தியசாலை
18. இரத்தினபுரி நூதனசாலை
19. பொலன்னறுவை தள வைத்தியசாலை
20. மாத்தறை பஸ் நிலையம்
21. பொலன்னறுவை புகையிரத நிலையம்
22. மாத்தறை புகையிரத நிலையம்
23. மிரிஜ்ஜாவில தாவரவியல் பூங்கா
24. யாழ்ப்பாண பொது நூலகம்
25. கண்டி புகையிரத நிலையம்
26. பேராதனை புகையிரத நிலையம்.
ஆகிய இடங்களில் முதல்கட்டமாக தொடங்கபப்டும் இந்த இலவச சேவை இப்போதைக்கு இரு இடத்தில் ஒருவரால் சுமார் 100 MB க்களை மட்டுமே பாவிக்கும் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பாவனையாளர்களின் தேவைக்கு தகுந்த மாதிரி வெகு விரைவில் பாவனை அளவை 100 MBயில் இருந்து அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதியமைச்சர் ஹர்ஷ த சில்வா நேற்று இது தொடர்பான ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.